Attention Sabarimala devotees: சபரிமலை பக்தர்கள் கவனத்திற்கு.. கேரள அரசு முக்கிய அறிவிப்பு

சபரிமலை: Important notification for the pilgrims going to Sabarimala from outside the state. வெளி மாநிலத்திலிருந்த சபரிமலைக்கு செல்லும் பக்தர்களுக்கு கேரள அரசு முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.

சபரிமலை ஐயப்பன் கோவிலில் மண்டல, மகர விளக்கு பூஜைக்காக கடந்த 16ம் தேதி மாலை 5 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டது. இதனைத்தொடர்ந்து சபரிமலையில் சாமி தரிசனம் செய்ய ஆன்லைன் புக்கிங் தொடங்கப்பட்டுள்ளது.

கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா கட்டுப்பாடு காரணமாக சபரிமலையில் பக்தர்கள் கூட்டம் குறைவாக இருந்து வந்தது. தற்போது கொரோனா கட்டுப்பாடு முழுமையாக நீக்கப்பட்டதால் கடந்த 17ம் தேதி முதல் நாளுக்கு நாள் பக்தர்கள் கூட்டம் அலைமோதி வருகிறது. தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகா, தெலுங்கானா, புதுச்சேரியில் இருந்து நீண்ட தூர பயணமாக சபரிமலைக்கு வரும் பக்தர்களளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இவர்களில் தமிழகத்திலிருந்து வரும் பக்தர்களே அதிகம்.

இதனைக் கருத்தில்கொண்டு சபரிமலை அய்யப்பன் கோவிலில் பக்தர்கள் தரிசனம் செய்வதற்கான நேரம் அதிகரிக்கப்பட்டுள்ளது. அதிகாலை 4 மணிக்கு பதில் 3 மணிக்கும் மாலை ஒரு மணி நேரம் முன்னதாக 3 மணிக்கும் நடைதிறக்கப்படும் என தேவசம் போர்டு அறிவித்துள்ளது.

இதுகுறித்து கேரள சுகாதாரத்துறை அமைச்சர் வீணா ஜார்ஜ் வெளியிட்டுள்ள அறிக்கையில், அப்படி வரும் பக்தர்களுக்கு ஓய்வு கிடைப்பது இல்லை. இதனால் அப்படிப்பட்ட தொலைத்தூர பக்தர்களுக்கு மலை ஏற்றம் சிரமமாக இருக்கும்.

இதனை கருத்தில் கொண்டு வெளி மாநிலங்களில் இருந்து நீண்ட தூரம் பயணம் செய்து வரும் பக்தர்கள் நிலக்கல்லில் வாகனங்களை நிறுத்தி விட்டு 2 அல்லது 3 மணி நேரம் இளைப்பாறிய பிறகு மலை ஏற வேண்டும் எனக் கூறியுள்ளார்.

ஏற்கனவே பக்தர்களின் வருகை அதிகரித்துள்ளதால், சாமி தரிசனம் செய்ய கூடுதலாக ஒரு மணிநேரம் அனுமதி அளிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. வழக்கமாக மாலை நேரத்தில் 4 மணிக்கு நடை திறக்கப்படும் நிலையில், மாலை 3 மணிக்கே நடை திறக்கப்பட்டு, பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள் என்று கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது. அதனால் தொலைத்தூரத்தில் இருந்து வரும் பக்தர்கள் அனைவரும் நன்கு ஓய்வு எடுத்த பின்னரே மலை ஏற வேண்டும் என்று கேர அரசு கேட்டுக்கொண்டுள்ளது.

The Government of Kerala has issued an important notification for the pilgrims going to Sabarimala from outside the state.