Skills Traing to Engineering Students: சென்னை ஐஐடி சார்பில் பொறியியல் மாணவர்களுக்கான தொழில்நுட்ப திறன் பயிற்சி

சென்னை: Impart Industry-ready tech Skills to Engineering Students: ஐஐடி மெட்ராஸ், பிரவர்தக் டெக்னாலஜீஸ், சோனி இண்டியா ஸாஃப்ட்வேர் மையத்துடன் ஒன்றிணைந்து பொறியியல் மாணவர்களுக்கு தொழில்நுட்ப திறன் பயிற்சி அளிக்கிறது.

ஐஐடி மெட்ராஸ் பிரவர்தக் டெக்னாலஜீஸ், சோனி இண்டியா ஸாஃப்ட்வேர் சென்டருடன் ஒன்றிணைந்து பொருளாதார ரீதியாக பின்தங்கியுள்ள பின்னணியைக் கொண்ட மாணவர்களுக்கு தொழில்துறைக்கு தயார் நிலையுள்ள தொழில்நுட்ப திறன்களை அளிக்கவிருக்கிறது. இந்த பாடவகுப்பு முற்றிலும் இலவசமாக வழங்கப்படுகிறது.

‘சோனி இந்தியா பள்ளி இறுதி திறன் மேம்பாட்டு பயிற்சி திட்டம்,’ என்றழைக்கப்படும் இது செயற்கை நுண்ணறிவு/ மெஷீன் லேர்னிங் இணைய பாதுகாப்பு மற்றும் கம்ப்யூட்டர் கிராபிக்ஸ் அதோடு கூடவே வணிக தொடர்பு திறன் போன்ற குறிப்பிட்ட துறைகளில் பயிற்சியளிக்கிறது.

இந்த திட்டம் ஏற்படுத்தும் தாக்கத்தை முக்கியப்படுத்தி பேராசிரியர். வி காமகோடி, இயக்குனர், ஐஐடி மெட்ராஸ் கூறுகையில், “இந்த புரோகிராம் பட்டம் பெறும் மாணவர்களுக்கும் தொழில் துறைக்கும் இடையே நிலவும் அறிவு மற்றும் திறன் சார்ந்த இடைவெளியை குறைக்கும் நோக்கத்தைக் கொண்டிருக்கிறது. ஏராளமான மாணவர்கள், குறிப்பாக இந்தியாவின் நகர்ப்புறங்களற்ற பகுதிகளில் வசிக்கும் மாணவர்களுக்கு இந்த முயற்சி பயனளிக்கும் என்று நம்புகிறோம்” என்று கூறினார்.

சோனி இந்தியா ஸாஃப்ட்வேர் சென்டர், இந்த கோர்ஸில் முன்னிலை வகிக்கும் 15 மாணவர்களுக்கு வேலை வாய்ப்பை அளிக்கும். பிரவர்தக் டெக்னாலஜீஸ் பவுண்டேஷன் மீதியுள்ள மாணவர்களுக்கு ஐஐடிஎம், பிடிஎப் வாயிலாக நேர்காணல்களை ஏற்பாடு செய்து இதர நிறுவனங்களில் வேலை வாய்ப்பை பெற்று தரும்.

மாணவர்கள் தேர்ந்தெடுக்கும் முறை 2020-2021, 2021-2022ல் குறைந்தபட்சம் 60 சதவிகிதம் பெற்று தேர்ச்சி பெற்ற மேலும் அவர்கள் பெற்றோரின் ஆண்டு வருமானம் ரூ.8 லட்சத்துக்கும் குறைவாக இருக்கும் பட்சத்தில், பொறியியல் பட்டதாரிகளின் கல்விக்கூட செயல்பாடு அடிப்படையில் நடைபெறும்

இதற்கும் கூடுதலாக நேர்முக தேர்வை தொடர்ந்து ஓர் எழுத்து தேர்வும் நடைபெறும். அந்த தேர்வில் அதிக மதிப்பெண்களுடன் வெற்றிகரமாக தேர்ச்சிபெற்ற மாணவர்கள் பயிற்சி திட்டத்தின் கீழ், வழங்கப்படும் உதவித்தொகை பெறத் தகுதியுடையவர்கள்.

இந்த பயிற்சி நடைபெறும் காலம் தோராயமாக ஆறு மாதங்களாகும். மேலும் அது முழு நேர பயிற்சியாக இருக்கும், ஐஐடிஎம் பிரவர்தக் டெக்னாலஜீஸ் பவுண்டேஷன் வகுப்பறைகளில் நேரடியாக நடத்தப்படும். பயிற்சி திட்டத்தை வெற்றிகரமாக முடித்த மாணவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கப்படும்.

இந்த பயிற்சியில் சேர விருப்பமுள்ளவர்கள் https://sonyfs.pravartak.org.in/ என்ற இணையதள முகவரியில் சென்று விண்ணப்பிக்கலாம்.