Home Minister Araga jnanendra : இந்த முறை பதற்றமான பகுதியிலும் விநாயகர் திருவிழா: உள்துறை அமைச்சர் அரக ஞானேந்திரா

Siddaramaiah : காங்கிரஸ் சார்பில் நடத்த திட்டமிட்டுள்ள குடகு செல்வோம் விவகாரத்தில் எங்களுக்கு எந்த பயமும் இல்லை என்று மாநில உள்துறை அமைச்சர் அரக ஞானேந்திரா கூறியுள்ளார்.

கோலார்: Home Minister Araga jnanendra : வெள்ள சேதப் பாதிப்பை பார்வையிட குடகுக்கு வந்த எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையா வாகனம் மீது முட்டை வீசப்பட்டதை கண்டித்து காங்கிரஸ் சார்பில் குடகிற்கு செல்வோம் போராட்டத்தை நடத்த காங்கிரஸ் முடிவு செய்துள்ளது. கோலார் மாவட்டத்தில் உள்ள தங்கவயலில் இந்த பிரச்னைக்கு பதிலளித்த உள்துறை அமைச்சர் அரக ஞானேந்திரா, காங்கிரஸ் கட்சி சார்பில் நடத்தப்படும் குடகுக்கு செல்வோம் என்ற போராட்டத்தால் எங்களுக்கு எந்த பயமும் இல்லை.

மாநிலத்தில் மக்களின் அமைதி எங்களுக்கு முக்கியம் (People’s peace is important to us). எனவே குடகில் 144 தடையை அமல்படுத்தியுள்ளோம். இருதரப்பினர் சண்டையிட்டு அமைதியை சீர்குலைக்க கூடாது. குடகுக்கு செல்வோம் போராட்டம் தற்போது உள்ள சுழலில் நடத்த தேவையில்லை. அங்கு போராட்டம் நடத்த காங்கிரஸ் உள்ளிட்ட எந்த கட்சிக்கும் அனுமதி இல்லை என்றார்.

அதே சமயம், முஸ்லிம் பகுதியில் சாவர்க்கரின் புகைப்படம் ஏன் வைக்க வேண்டும் (Why put Savarkar’s photo?) என்று முன்னாள் முதல்வர் சித்தராமையாவின் கேள்விக்கு, சாவர்க்கர் ஒரு மரியாதைக்குரிய சுதந்திரப் போராட்ட வீரர்.அவர் ஆங்கிலேயரின் காலணியை நக்கும் நபராகத் இருந்தார் என்று யாரோ கூறியதை கேட்டு, அவருக்கு எதிராக சித்தராமையா போன்றவர்கள் குரல் எழுப்ப காரணமாகி உள்ளது என்று அவர் பதிலளித்தார்.

தற்போது மாநிலம் எங்கும் அமைதியும், ஒழுக்கமும் நிலவுகிறது. மாநிலத்தில் விநாயகர் சதுர்த்தி திருவிழா (Vinayagar Chaturthi festival)அமைதியாக நடைபெற வேண்டும். இந்த முறை பதற்றமான பகுதிகளிலும் விநாயகர் சிலையை வைத்து விழாவை நடத்த முடிவு செய்துள்ளோம். சர்ச்சைக்குரிய பெங்களூரு சாம்ராஜ்பேட்டை ஈத்கா மைதானம் வருவாய்த்துறைக்கு சொந்தமானது. அங்கு தேவையான பாதுகாப்பு வழங்க உள்ளோம் என உள்துறை அமைச்சர் அரக ஞானேந்திரா தெரிவித்தார்.

குடகு மாவட்டத்தில் சித்தராமையா வாகனம் மீது முட்டை வீசியதை கண்டித்து மாநில காங்கிரஸ் சார்பில் குடகுக்கு செல்வோம் போராட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டது. இதனால் சட்டம் ஒழுங்கு பிரச்னை ஏற்படும் என்று கருதிய, மாவட்ட நிர்வாகம், அம்மாவட்டத்தில் நாளை முதல் 4 நாள்களுக்கு 144 தடை உத்தரவு (144 injunction) பிறப்பித்துள்ளது.