Karthik Gopinath case: யூடியூபர் கார்த்திக் கோபிநாத்திற்கு சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு

karthick-gopinath
யூடியூபர் கார்த்திக் கோபிநாத்திற்கு சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு

Karthik Gopinath case: சிறுவாச்சூர் மதுரகாளியம்மன் கோவில் திருப்பணிக்கு மக்களிடம் ரூ.33 லட்சம் நன்கொடை வசூலித்து மோசடி செய்ததாக யூடியூபர் கார்த்திக் கோபிநாத் மீது வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கு இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது, தன் மீதான வழக்கை ரத்து செய்யக் கோரி யூடியூபர் கார்த்திக் கோபிநாத் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இதற்கிடையே, கார்த்திக் கோபிநாத்தை காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரி காவல்துறை சார்பிலும் மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த இரு மனுக்கள் மீதான விசாரணையையும் ஜூன் 13ஆம் தேதிக்கு ஒத்திவைத்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. மேலும், தனிப்பட்ட வங்கிக் கணக்கின் விவரங்களை தாக்கல் செய்ய கார்த்திக் கோபிநாத்திற்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இதையும் படிங்க: Petrol Price: சென்னையில் இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்