Heavy rain in Tamil Nadu from tomorrow: தமிழகத்தில் நாளை முதல் கனமழை: இந்திய வானிலை மையம்

சென்னை: Heavy rain in Tamil Nadu from tomorrow. தமிழகத்தில் நாளை முதல் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழகம் முழுவதும் வடகிழக்கு பருவமழை மீண்டும் தீவிரமடைய உள்ளது. இம்மாத தொடக்கத்தில் தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் கனமழை வெளுத்து வாங்கிய நிலையில், கடந்த சில நாட்களாக சிறிய இடைவெளி கொடுத்தது. இதனால் பல இடங்களில் வெள்ளநீர் சூழ்ந்தது. சென்னையில் பல்வேறு இடங்களில் மழை நீர் தேங்கியதால் மாநகராட்சி துரித நடவடிகை எடுத்து நீரை வெளியேற்றும் பணியில் ஈடுபட்டது.

அதன் தொடர்ச்சியாக கடந்த 3 நாட்களாக தமிழகத்தில் மழை சற்று குறைந்து இருந்தாலும், தென் மாவட்டங்களில் மட்டும் சில இடங்களில் கன மழையும், மற்ற பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழையும் பெய்து வருகிறது.

இந்நிலையில் தென்கிழக்கு வங்கக்கடலில் ஏற்கனவே உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி தற்போது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுவடைந்தது என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது . ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி அடுத்த 24மணி நேரத்தில் தாழ்வு மண்டலமாக வலுப்பெறும் என வானிலை ஆய்வு மையம் தெரிவுத்துள்ளது. இதனால் தமிழகத்தில் நாளை முதல் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது எனவும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.