Har Ghar Tiranga Campaign : பெங்களூரு மாநகராட்சி சார்பில் ஹர் கர் திரங்கா பிரச்சாரம்

75 வது பவள சுதந்திர தினவிழாவின் ஒரு பகுதியாக, இன்று முதல் ஆகஸ்ட் 15 ஆம் தேதி வரை தொடங்கப்பட்ட “ஹர் கர் திரங்கா” (ஒவ்வொரு வீட்டிலும் தேசியக் கொடி) பிரச்சாரம் (Har Ghar Tiranga Campaign) பெங்களூரு மாநகராட்சியின் அனைத்து துறைகளிலும் கொண்டாடப்படுகிறது.

எலஹங்கா மண்டலத்தில் உள்ள அரசு ஊழியர்களுக்கு கொடி விநியோகம்:

ஹர் கர் திரங்கா அபியானின் ஒரு பகுதியாக, எம்.எல்.ஏ எஸ்.ஆர்.விஸ்வநாத் (MLA SR Viswanath) இன்று எலஹங்கா மினி விதான சவுதா முன் உள்ள அரசு ஊழியர்களுக்கு தேசியக் கொடிகளை வழங்கி பிரச்சாரம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தினார். இந்நிகழ்ச்சியில் மாநகராட்சி இணை ஆணையர் பூர்ணிமா மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

பின்னர் ஹெப்பாள் சந்திப்பில் தூய்மைப் பணி நடைபெற்றது.

மேற்கு மண்டல மண்டல பகுதியில் நிகழ்ச்சி அட்டவணை:

மேற்கு மண்டலம் சாமராஜ்பேட்டை சிறுவர் மன்றம், காந்திநகர், மல்லேஷ்வா சந்திப்பு, ஆனந்தராவ் வட்டம், சுதந்திரப் பூங்கா, கோவிந்தராஜநகர் (Govindarajanagar) உள்ளிட்ட இடங்களில் ஹர்கர் திரங்கா பிரசார‌ நிகழ்ச்சி நடத்தப்பட்டது.

பொம்மனஹள்ளி மண்டலத்தில் நிகழ்ச்சியின் அமைப்பு:

பொம்மனஹள்ளி (Bommanahalli) மண்டலம் பெங்களூர் தெற்கு சட்டமன்றத் தொகுதியின் ஆர்பிஐ லேஅவுட் மைதானத்தில் ஹர் கர் திரங்கா அபியான் நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டு, அந்த நிகழ்ச்சியில் மூத்த குடிமக்களுக்குப் பாராட்டு தெரிவிக்கப்பட்டது. மேலும் அரசு ஊழியர்கள், மாணவர்கள் மற்றும் பொதுமக்களுக்கு கொடிகள் வழங்கப்பட்டன.

தென் மண்டலத்தில் தூய்மை பிரச்சாரம்:

75 வது சுதந்திர அமிர்த மஹோத்சவ் விழாவில், தெற்கு மண்டல ஆணையர் திரு. ஜெயராம் ராய்பூர் மற்றும் கன்னட சாகித்ய பரிஷத் தலைவர் மகேஷ் ஜோஷி (Kannada Sahitya Parishad President Mahesh Joshi)ஆகியோர், தென் மண்டலத்தின் கித்தூர் ராணி சென்னம்மா வட்டத்தில் (பிபின் ராவத் பூங்கா) தூய்மை பிரச்சாரம் மற்றும் ஹர் கர் திரங்கா பிரச்சாரத்தை தொடங்கினர். பத்மநாபநகர் சட்டப் பேரவைத் தொகுதி இன்று நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில், மாநகராட்சி செயல் பொறியாளர்கள், வருவாய்த்துறை அலுவலர்கள், உதவி வருவாய் அலுவலர்கள், சுகாதார அலுவலர்கள், அஅரசு ஊழியர்கள் கலந்து கொண்டனர்.

கிழக்கு மண்டல மாணவர்களின் விழிப்புணர்வு பேரணி:

கிழக்கு மண்டலத்தில் உள்ள பெங்களூரு பள்ளி-கல்லூரி மாணவர்களால் ஹர் கர் திரங்கா அபியான் குறித்த விழிப்புணர்வு பேரணி முக்கிய சாலைகளில் நடத்தப்பட்டது. பாரத் சாரணர் (Bharat Scout) மற்றும் வழிகாட்டி மாணவர்கள், திடக்கழிவு துறை குழுவினர், பள்ளி தலைமையாசிரியர்கள், பள்ளி ஆசிரியர்கள் மற்றும் பலர் விழிப்புணர்வு ஊர்வலத்தில் கலந்து கொண்டனர்.

புலிகேசிநகர் பகுதியில் தூய்மை பிரச்சாரம் நடைபெற்றது.

டவுன் ஹால், மெஜஸ்டிக் ரயில் நிலையம் மற்றும் கருடா மாலில் புகைப்படக் கண்காட்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

1947 ஆம் ஆண்டு சுதந்திரம் பெற்ற இந்தியா பாகிஸ்தான் பிரிவினையால் பாதிக்கப்பட்ட கோடிக்கணக்கான மக்களின் வேதனை மற்றும் துயரங்களை வெளிச்சம் போட்டுக் காட்டும் வகையில் ஆக. 14 ஆம் தேதிஉஅன்று “பிரிவினை துயர நினைவு தினம்” கொண்டாடப்படுகிறது. இது தொடர்பான கண்காட்சி சங்கொல்லி ராயண்ணா ரயில் நிலையம், சுதந்திர பூங்கா, கருடா மால் (Garuda Mall)ஆகியவற்றில் ஏற்பாடு செய்யப்பட்டது.

நாளை காலை எலஹங்கா மண்டலம், தாசரஹள்ளி மண்டலத்திலும், மதியம் ஆர்.ஆர்.நாரா, பொம்மனஹள்ளி, மகாதேவ்புரா மண்டலத்திலும் புகைப்படக் கண்காட்சி நடைபெறுகிறது.

பேருந்திலும் கொடி விற்பனை:

இன்று அதிகாலை முதல் நகரின் முக்கிய இடங்களான மெஜஸ்டிக், மாநகராட்சி தலைமை அலுவலக வட்டம், கே.ஆர்.மார்க்கெட் வட்டம், விக்டோரியா மருத்துவமனை பேருந்து நிலையம், கலாசிபால்யா மார்க்கெட், தாசப்பா மருத்துவமனை முன்புறம், பசவேஸ்வர் வட்டம், கிருஷ்ண கிருபா வட்டம், மெட்ரோ ரயில் நிலையம் உள்ளிட்ட இடங்களில் தேசியக் கொடிகள் (National flags) விநியோகிக்கப்பட்டது. மாநகர பேருந்து உட்பட மாநகராட்சியின் அனைத்துத் துறைகளிலும் ஹர் கர் திரங்கா பிரசாரம் கடைப்பிடிப்பது குறித்து குடிமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.