Congress released the first Candidate list in Gujarat : 43 வேட்பாளர்கள் கொண்ட முதல் பட்டியலை வெளியிட்ட காங்கிரஸ்

குஜராத்: Congress released the first Candidate list in Gujarat : குஜராத் சட்டசபை தேர்தல் டிசம்பர் 1 மற்றும் 5 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக நடைபெறும் என்றும், இரு கட்ட முடிவுகளும் டிசம்பர் 8 ஆம் தேதி அறிவிக்கப்படும் என்றும் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. இதையடுத்து 43 வேட்பாளர்கள் அடங்கிய முதல் பட்டியலை வெளியிட்ட காங்கிரஸ் அக் கட்சியின் முன்னணி தலைவர்களுக்கு சீட்டு வழங்கியது.

காங்கிரஸ் வெளியிட்ட முதல் பட்டியலில் 7 மகளிருக்கு சீட்டு வழங்கப்பட்டுள்ளது (7 Women have been given tickets). தவிர, சில முன்னாள் எம்எல்ஏக்கள் சீட்டு பெறுவதில் வெற்றி பெற்றுள்ளனர். வதோதரா காங்கிரஸ் தலைவர் நரேந்திர ராவத்தின் மனைவியும் சயாஜிகஞ்ச் தொகுதியில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

மாநிலங்களவை உறுப்பினர் அமி யாஜ்னிக் (Rajya Sabha member Ami Yajnik)அவர்களுக்கு சீட்டு வழங்கப்பட்டுள்ளது. அவர், முதல்வர் பூபேந்திர பட்டேல் தான் பிரதிநிதித்துவப்படுத்தும் கட்டலோடியா தொகுதியில் காங்கிரஸ் கட்சி சார்பாக‌ போட்டியிடுகிறார். மூத்த தலைவரும், கட்சியின் முன்னாள் எம்எல்ஏவுமான அர்ஜுன் மோத்வாடியாவுக்கு போர்பந்தர் தொகுதியில் சீட்டு வழங்கப்பட்டுள்ளது. அங்கு அவர் 2012 மற்றும் 2017 ஆம் ஆண்டுகளில் பாஜகவின் பாபு போக்கிரியாவிடம் தோல்வியடைந்தார்.

வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ள 43 தொகுதிகளில் ஜலோத் (எஸ்டி) தொகுதியில் மட்டுமே காங்கிரசுக்கு எம்எல்ஏ உள்ளார். ஆனால், இந்தத் தொகுதியில் சிட்டிங் எம்எல்ஏ பவேஷ் கட்டாராவுக்குப் பதிலாக மிதேஷ் கராசியாவுக்கு டிக்கெட் வழங்கப்பட்டுள்ளது. 2012, 2017 ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற தேர்தலில் வெற்றி பெற்று, கராசியா இந்த தொகுதியில் எம்எல்ஏவாக பணியாற்றினார்.

ஜஸ்தான் தொகுதியின் முன்னாள் எம்எல்ஏ போலாபாய் கோஹல் மீண்டும் டிக்கெட் பெற்றுள்ளார் (Former MLA of Jastan Constituency Bolabai Gohal has got ticket again). பாவ்நகரின் மஹுவா தொகுதியில் இருந்து மூத்த தலைவரும், பாஜகவின் முன்னாள் எம்எல்ஏவுமான கனுபாய் கல்சாரியா, அதே தொகுதிக்கு காங்கிரஸ் கட்சியால் தேர்வு செய்யப்பட்டு அவருக்கு டிக்கெட் வழங்கப்பட்டுள்ளது. 2017ஆம் ஆண்டு பாஜக சார்பில் போட்டியிட்ட சங்கேடா (எஸ்டி) தொகுதியில் முன்னாள் எம்எல்ஏ திருபாய் பில் நிறுத்தப்பட்டுள்ளார்.

காங்கிரஸின் முதல் பட்டியலில் 43 வேட்பாளர்கள், 10 பட்டேல் அல்லது படிதர் வேட்பாளர்கள், 11 ஆதிவாசிகள், 10 ஓபிசிக்கள் மற்றும் 5 எஸ்டி வேட்பாளர்களுக்கு டிக்கெட் வழங்கப்பட்டுள்ளது. ஆளும் பாஜக இன்னும் வேட்பாளர் பட்டியலை அறிவிக்கவில்லை (BJP is yet to announce the list of candidates). அண்மையில் குஜராத் தேர்தல் களத்தில் இறங்கிய ஆம் ஆத்மி கட்சி 118 இடங்களுக்கு வேட்பாளர்களை அறிவித்துள்ளது.

காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே (Congress leader Mallikarjuna Kharge) தலைமையில் நடைபெற்ற மத்திய தேர்தல் கமிட்டி கூட்டத்தில் வேட்பாளர்கள் பெயர்கள் இறுதி செய்யப்பட்டதை அடுத்து இந்த பட்டியல் வெளியிடப்பட்டது. 2 தசாப்தங்களுக்கும் மேலாக பாஜக ஆட்சியில் இருக்கும் பிரதமர் மோடியின் சொந்த ஊரான குஜராத்தில் ஆதிக்கம் செலுத்துவதை காங்கிரஸ் நோக்கமாகக் கொண்டுள்ளது.