Guinness Book of Records:12,000 புத்தகத்தில் கிறிஸ்துமஸ் மரம் உருவாக்கி கின்னஸ் சாதனை

கோவை: Guinness World Record for building a Christmas tree by stacking 12,000 books. கோவையில் 12,000 புத்தகங்களை அடுக்கிவைத்து கிறிஸ்துமஸ் மரம் உருவாக்கி மாணவர்கள் கின்னஸ் சாதனை படைத்துள்ளனர்.

உலகம் முழுவதும் கிறிஸ்தவர்களின் பண்டிகையான இயேசு கிறிஸ்து பிறந்த தினமான நேற்று (25ம் தேதி) கிறிஸ்துமஸ் கொண்டாட்டம் நடைபெற்றது. இதன் ஒரு பகுதியாக கோவை சிங்காநல்லூர் பகுதியில் உள்ள எஸ் எஸ்.வி.எம் பள்ளி மற்றும் சந்திரன்யுவா பவுன்டேஷன் இணைந்து, கிறிஸ்துமஸை வரவேற்கும் வகையிலும், புத்தாண்டை வரவேற்கும் வகையிலும், கின்னஸ் உலக சாதனை படைத்துள்ளனர்.

Read More: Nirmala Sitharaman admitted to AIIMS: நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதி

இந்த சாதனை நிகழ்ச்சியில் சுமார் 500க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்துகொண்டு சுமார் 12,000 புத்தகங்களை அடுக்கி வைத்து கிறிஸ்துமஸ் மரத்தை, ஒரு மணி நேரம் 30 நிமிடங்களில் உருவாக்கியுள்ளனர்.

இதனை பார்வையிட்ட கின்னஸ் உலக சாதனை அமைப்பின், சார்பாக கலந்து கொண்ட கிரிஸ்டோபர் டெய்லர் கிராப்ட் இந்த சாதனைக்கான சான்றிதழை வழங்கினார்.

Read More: A Rare Giant Eagle: தூத்துக்குடியில் அரியவகை ராட்சத கழுகை மீட்ட வனத்துறை

இதனை பெற்று கொண்ட பள்ளியின், நிர்வாக அறங்காவலர் மணிமேகலை மோகன், மற்றும் சந்திரன் யூவா பவுண்டேஷன், அறங்காவலர் சசிகலா ஆகியோர் சான்றிதழ்களை மாணவர்களிடம் வழங்கினர்.