Gold rate: தங்கம் விலை சவரனுக்கு ரூ.240 உயர்வு

தங்கம் விலை

Gold rate: தங்கம் விலையானது வாரத்தின் முதல் நாளான  திங்கள் முதல் விலை ஏற்ற இறக்கத்துடனே இருந்து வந்த நிலையில் இன்று விலை அதிகரித்துள்ளது.

சென்னையில் இன்று 22 கேரட் ஆபரணத் தங்கம் ஒரு கிராம் 4835 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. நேற்று மாலை இதன் விலை ரூ. 4805 ஆக இருந்தது. இன்று தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ. 30 உயர்ந்துள்ளது.

உக்ரைன் – ரஷியா போர் மற்றும் கொரோனா ஊரடங்கு உள்ளிட்ட காரணங்களால் தங்கத்தின் மீதான முதலீடு அதிகரித்ததால் அதன் விலை தொடர்ந்து அதிகரித்து வந்தது. எனினும் கடந்த சில நாட்களாக தங்கம் விலை ஏற்றம், இறக்கம் கண்டு வருகிறது.

இந்நிலையில் 3 நாட்கள் குறைந்து வந்த தங்கம் விலை இன்று மீண்டும் அதிகரித்துள்ளது. இன்று தங்கம் விலை சவரனுக்கு ரூ.240 உயர்ந்து ரூ.38,680-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் தங்கம் இன்று கிராமுக்கு ரூ.30 அதிகரித்து ரூ.4,835க்கு விற்பனை செய்யப்படுகிறது.

அதேபோல, வெள்ளி விலை இன்று குறைந்துள்ளது. இன்று கிராமுக்கு 50 காசுகள் குறைந்து ரூ.65க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிலோ வெள்ளி ரூ.65,000 விற்பனை செய்யப்படுகிறது.

இதையும் படிங்க: ராஜபக்சேக்கள் இல்லாத இளம் அமைச்சரவையை நியமிப்பேன்- கோத்தபய அறிவிப்பு