Girls hostels are advised to register: பெண்கள் விடுதிகள் இம்மாத இறுதிக்குள் பதிவு செய்ய அறிவுரை

நாமக்கல்: Girls hostels are advised to register by the end of this month: அரசு சாரா பெண்கள் விடுதிகளை இம்மாத இறுதிக்குள் பதிவு செய்ய வேண்டும் என நாமக்கல் ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து நாமக்கல் ஆட்சியர் வெளியிட்டுள்ள அறிக்கையில், நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அவர்கள் பதிவு செய்யப்படாமல் இயங்கும் பெண்கள் நாமக்கல் மாவட்டத்தில் அரசு மற்றும் அரசு சாரா நிறுவனங்கள் நடத்தும் பெண்கள் விடுதிகள், அறக்கட்டளைகள், சங்கங்கள் மற்றும் மதம் சார்ந்த நிறுவனங்கள், கல்லூரிகள், பயிற்சி நிறுவனங்கள், தொழிற்கல்வி பயிற்சி நிறுவனங்கள் நடத்தும் பெண்கள் விடுதிகள் மற்றும் நிறுவனங்கள், தொழிற்சாலைகள், தனியார் மற்றும் தனிநபர் ஆகியோரால் நடத்தப்பட்டு வரும் பெண்கள் விடுதிகள் மற்றும் குழந்தைகள் இல்லங்கள், பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் தற்காலிகமாக நடத்தும் விடுதிகள் அனைத்தும் இம்மாத இறுதிக்குள் பதிவு செய்ய வேண்டும்.

பதிவு உரிமம் பெறுவதற்கு தமிழ்நாடு அரசின் https://tnswp.com என்ற இணையதளம் வழியாக விண்ணப்பம் செய்து அதன் நகலினை இணைத்து உரிய ஆவணங்களுடன் விண்ணப்பிக்குமாறு தெரிவிக்கப்படுகிறது.

குறிப்பிட்ட காலத்திற்குள் பதிவு செய்ய தவறினால் விடுதியின் உரிமையாளர் மற்றும் மேலாளர் ஆகியோருக்கு சட்டப்பிரிவின்படி 2 ஆண்டு கால வரை சிறை தண்டனையும் அபராதமும் விதிக்கப்படும்.

எனவே, இம்மாத இறுதிக்குள் விண்ணப்பிக்க தவறிய நிறுவனங்கள் மற்றும் தொழிற்சாலைகள் மீது கடுமையான நடவடிக்கை மற்றும் அபராதம், 2 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிப்பதுடன் நிறுவனத்தின் உரிமம் ரத்து செய்யப்படும்.

பதிவு உரிமம் தொடர்பான கூடுதல் விவரங்களுக்கு மாவட்ட சமூகநல அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம். 18 வயதிற்கு கீழ் உள்ள பள்ளி குழந்தைகள் விடுதி மற்றும் குழந்தைகள் இல்லங்கள் பதிவிற்கு மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகினை தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

மேலும் விபரங்களுக்கு மாவட்ட சமூகநல அலுவலர், மாவட்ட சமூகநல அலுவலகம், அறை எண்.234, கூடுதல் கட்டிடம், மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம், நாமக்கல்-637003 மாவட்ட சமூகநல அலுவலக தொலைபேசி எண்.04286-299460. என்ற முகவரியில் தொடர்புகொண்டு தெரிந்துகொள்ளலாம் என தெரிவித்துள்ளார்.