Heavy rain in Badkal : பட்கலில் கனமழைக்கு வீட்டின் மீது மலை மலை மண் சரிந்து விழுந்து நான்கு பேர் இறந்திருக்கலாம் என சந்தேகம்

கார்வார் : Four people may have died due to the heavy rain in Badkal : கனமழையால் மலை இடிந்து விழுந்தது: மாநிலம் முழுவதும் கனமழை தொடர்கிறது, மடிகேரி, வட கன்னடம், தட்சிண கன்னடம், ஹாசன் உள்ளிட்ட‌ மாவட்டங்களில் கடந்த 3 நாட்களாக கனமழை பெய்து வருகிறது. கனமழையால் வட கன்னடம் மாவட்டத்தில் உள்ள பட்கலின் முத்தள்ளியில் ஒரு வீட்டின் மீது மலை மண் சரிந்து விழுந்ததில் நான்கு பேர் இறந்திருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.

வட கன்னடம் மாவட்டத்தில் உள்ள பட்கல் பகுதியில் வீட்டின் மேற்கூரை மலை மண் சரிந்து விழுந்ததில் வீட்டின் உள்ளே இருந்த 4 பேர் உயிரிழந்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது, சம்பவம் நடந்த இடத்திற்கு தேசிய பேரிடர் மீட்பு படையினர் (NDRF) மற்றும் மாநில பேரிடம் மீட்புப் படையினர் (SDRF) விரைந்துள்ளது. தற்போது மலை மண் சரிந்த வீட்டை, அப்பகுதி மக்கள்மீட்புப் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த நிலையில் கனமழைக்கு ஹாசன் மாவட்டம் அரிசிகெரே (Hassan District Arisikere) வட்டத்தில் உள்ள முரன்டுகெரே ஏரி நிரம்பி, வழிந்தோடும் தண்ணீரால் அருகில் இருந்த சாலை சேதமடைந்து, போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. மழைக்கு அந்தப் பகுதியில் தாழ்வாக இருந்த வீடுகளில் வெள்ளம் புகுந்துள்ளது. இதனையடுத்து வீட்டில் தேங்கி உள்ள‌ வெள்ள நீரை வெளியேற்றும் பணியில் வீட்டில் இருந்தவர்கள் ஈடுபட்டு வருகின்றனர். மழைக்கு ஹாசன் உள்ளிட்ட மாநிலங்களில் பயிர் சேதம் ஏற்பட்டுள்ளது. மழையால் ஏற்பட்ட சேதங்களை கணக்கிட்டு விவசாயிகளுக்கு ஏற்பட்டுள்ள இழப்புகளுக்கு நிவாரணம் அளிப்பது தொடர்பான ஆலோசனைக் கூட்டத்திற்கு இன்று முதல்வர் பசவராஜ் பொம்மை தலைமையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

ஏற்கெனவே கர்நாடகத்தின் தென்கன்னடம், உடுப்பி, வடகன்னடம் South Kannada, Udupi, North Kannada), சிக்மகளூரு, ஹாசன், குடகு உள்ளிட்ட மாநிலங்களுக்கு கன மழை எச்சரிக்கையை இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்திருந்தது. மாநிலத்தில் கடலோர மாவட்டங்கள் உள்ளிட்ட சில மாவட்டங்களில் தொடர்ந்து கன மழை பெய்து வருவதால், ஏற்படும் சேதங்களை தவிர்க்கவும், பாதிக்கப்பட்டவர்களை மீட்கவும் தேசிய, மாநில பேரிடர் மீட்புப் படையினர் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர். அதோடு கனமழையையொட்டி தென் கன்னடம் உள்ளிட்ட மாவட்டங்களில் மழையையொட்டி செவ்வாய்க்கிழமை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. கனமழையையொட்டி பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்கும்படியும், அவசியமில்லாமல் வெளியே வராது இருக்குமாறு அறியுறுத்தப்பட்டுள்ளனர்.