Flood alert : காவிரி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

Image credit: Twitter.

சேலம்: Flood alert banks of Cauvery :சேலம் மற்றும் நாமக்கல் மாவட்ட ங்களில் காவிரி கரையோரம் வசிக்கும் பொதுமக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கர்நாடகா மாநிலத்தில் கேஆர்எஸ் மற்றும் கபினி அணைகளில் இருந்து காவிரி ஆற்றில் கடந்த 8-ந் தேதி முதல் தண்ணீர் திறந்து விடப்பட்டு வருகிறது. இதனால் மேட்டூர் அணைக்கு கடந்த 2 நாட்களாக நீர்வரத்து அதிகரித்து கொண்டே இருக்கிறது. இந்த நிலையில், காவிரியில் நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வருவதால் மேட்டூர் அணை (Mettur Dam) நீர்மட்டம் இன்று முழு கொள்ளளவை எட்டியுள்ளது .

முழு கொள்ளளவான 120 அடியை எட்டியுள்ளதால் முதற்கட்டமாக 16 கண் மதகு வழியாக 25,000 கன அடி நீரும், நீர்மின் நிலையங்கள் வழியாக 25,000 கன அடி நீரும் அணையில் இருந்து திறக்கப்பட்டுள்ளது. மேட்டூர் அணை வரலாற்றில் 42-வது முறையாக முழு கொள்ளளவை எட்டியுள்ளது. மேட்டூர் அணை . அணைக்கான நீர்வரத்து 1.18 லட்சம் கன அடியாக அதிகரித்துள்ளது. நீர் இருப்பு 90.92 டிஎம்சியாக உள்ளது.அணையில் இருந்து டெல்டா பாசனத்திற்கு 25,000 கன அடி நீர் (25,000 cubic feet of water for delta irrigation) வெளியேற்றப்படுகிறது. சேலம் மற்றும் நாமக்கல் மாவட்ட கரையோர பகுதி மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இது குறித்து மாவட்ட ஆட்சியர் செ.கார்மேகம் வெளியிட்ட செய்தி குறிப்பு: காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து பலத்த‌ மழை பெய்து வருவதால் காவிரி ஆற்றிற்கு தொடர்ந்து அதிகளவு நீர்வரத்து உள்ளது. அதிக நீர்வரத்து தொடர்வதால் மேட்டூர் அணை தனது முழு கொள்ளளவை இன்று எட்டியுள்ள‌து.

இதனால் மேட்டூர், எடப்பாடி மற்றும் சங்ககிரி வட்டங்ளுக்குட்பட்ட காவிரி கரையோரத்தில் தாழ்வான பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள், விவசாயிகள் உள்ளிட்டோர் சற்று மேடான பகுதிக்கு சென்று பாதுகாப்பாக இருக்கும் படியும் (Move to higher ground to be safe), காவிரி கரையோரம் வசிக்கும் பொதுமக்கள் தங்களது கால்நடைகள் மற்றும் உடைமைகளை பாதுகாத்துக் கொள்ளும் படியும், சேலம் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் அறிவுறுத்தப்படுகிறது.

மேலும், பொதுமக்கள் காவிரி ஆற்றங்கரைகளில் பரிசல்களை இயக்கவோ, கரையோரங்களில் குளிக்கவோ, துணிகளை துவைக்கவோ, கால்நடைகளை குளிப்பாட்டவோ கூடாது. குறிப்பாக சிறுவர்கள் மற்றும் பெரியவர்கள் காவிரி கரையோரங்களில் நீர்நிலைகளின் (water bodies) அருகில் செல்லவோ, புகைப்படங்கள் எடுக்கவோ கூடாது.

வருவாய்த்துறை, பொதுபணித்துறை உள்ளிட்ட அனைத்துறைகளின் சார்பில் பாதுகாப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் (Precautionary measures)தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருவதோடு பொது மக்களுக்கு தண்டோரா மூலம் விழிப்புணர்வு மற்றும் எச்சரிக்கைகள் செய்யப்பட்டு வருகின்றன.

மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள பேரிடர் மேலாண்மை கட்டுப்பாட்டு அறையில் 24 மணி நேரம் தொடர்ந்து அலுவலர்கள் பணியமர்த்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகின்றது. மேட்டூர் அணையில் பொதுப்பணித்துறை அதிகாரிகளும் (Public Works Officer) அங்கேயே முகாமிட்டு தொடர்ந்து நீர்வரத்து குறித்து ஆய்வு மற்றும் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். காவிரி கரையோரத்தில் தாழ்வான பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது என அதில் தெரிவித்துள்ளார்.