Fire cracker factory explosion: 5 killed : மதுரை திருமங்கலம் அருகே பட்டாசு தொழில் சாலையில் வெடி விபத்து: 5 பேர் பலி, 13 பேர் காயம்

மதுரை: Fire cracker factory explosion: 5 killed, 13 injured : மதுரை திருமங்கலத்தை அடுத்த அழகு சிறை கிராமத்தில் பட்டாசு தொழில்சாலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் 5 பேர் உயிரிழந்தனர். 13 பேர் காயமடைந்தனர்.

மதுரை திருமங்கலம் அடுத்த அழகு சிறை கிராமத்தில் செயல்பட்டு வரும் தனியார் பட்டாசு தொழில்சாலையில் ஏராளமானோர் பணிபுரிந்து வருகின்றனர். இந்நிலையில் இன்று திடீரென ஏற்பட்ட வெடி விபத்தில் 5 அறைகள் முழுவதும் தரை மட்டமானது. இதில் ஒரு பெண் உள்பட 5 பேர் நிகழ்விடத்திலேயே உடல் வெடித்துச் சிதறி உயிரிழந்தனர். உயிரிழந்தவர்கள் அம்மாசி, வல்லரசு, கோபி, விக்கி, பிரேமா (Ammasi, Vallarasu, Gopi, Vicky, Prema) என தெரிய வந்ததுள்ளது. 13 பேர் காயமடைந்த நிலையில் மதுரை அரசு தலைமை மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

விபத்து குறித்து தகவல் அறிந்த மதுரை மற்றும் திருமங்கலம் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று தீயை அணைத்தனர். மாவட்ட ஆட்சியர் அனீஸ் சேகர் (District Collector Anees Shekhar), முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் உள்ளிட்டோர் நேரடியாக சம்பவ இடத்தை பார்வையிட்டனர். இது குறித்து நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் வெடி விபத்தில் உயிரிழந்தவர்களின் குடுபங்களுக்கு தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி (Tamil Nadu Governor R.N.Ravi) இரங்கல் தெரிவித்துள்ளார். இது குறித்த ட்விட்டர் பதிவில்,’மதுரை பட்டாசு ஆலையில் ஏற்பட்ட விபத்தில் மதிப்புமிக்க உயிர்களை இழந்தவர்களின் குடும்பங்களுக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன். மேலும், விபத்த்தில் காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறேன்’ எனத் தெரிவித்துள்ளார்.

விபத்தில் உயிரிழந்தோருக்கு முதல்வர் ஸ்டாலின் (Chief Minister M.K.Stalin) ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார். வெடிவிபத்து குறித்த செய்தி கேட்டு மிகுந்த வேதனையடைந்ததாகவும் அவர் தெரிவித்தார். மேலும், உயிரிழந்தோர் குடும்பத்துக்கு நிதியுதவியாக 5 பேர் குடும்பத்திற்கும் தலா ரூ.5 லட்சம் வழங்கப்படும் என்று அறிவித்தார். காயமடைந்தவர்களுக்கு உரிய சிகிச்சை அளிக்கும்படி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.