Farmer Protest: சிக்கமகளூர் மாவட்டத்தில் விவசாயிகளுக்கு தினம் தோறும் ஏதாவது ஒரு பிரச்சனைகள் தொல்லைகள் நிரந்தரமாக இருந்து வருகிறது அதேபோல காப்பி தோட்ட உரிமையாளர்களுக்கும் தினந்தோறும் காட்டு யானைகள் வனவிலங்குகள் என விவசாய பயிர்களை சேதப்படுத்தி தினம்தோறும் சிரமம் கொடுத்து வருகிறது ஒரு புறம் விவசாயிகளுக்கு சொந்தமான நிலம் அருகே இருந்த நிலங்களை ஆக்கிரமிப்பு நிலம் எனக் கூறி அதை அகற்றுவதற்கு அரசு முன்வந்துள்ளது

அதேபோல ஒருபுறம் வனவிலங்கு சரணாலய பகுதியாகவும் பபர் ஜோன் என அறிவிக்க உள்ள சூழ்நிலையில் இதற்கு முன்பு தனித்தனியே ஒவ்வொரு பிரிவினரும் மற்றும் விவசாய சங்கத்தினரும் மாவட்டத்திற்கு என பல்வேறு பிரிவாக போராட்டங்கள் நடத்தி வந்த நிலையில் இன்று ஏ ஐ டி யு சி செயலாளர் விஜயகுமார் மற்றும் உடன் பல்வேறு சங்க அமைப்பினர் கைகோர்த்து விவசாய சங்கத்தினர் ஒன்று சேர்ந்து கடந்த 10 நாட்களாக பிரம்மாண்டமான போராட்டத்தையும் மாநாட்டையும் நடத்த வேண்டும் எனவும் இது விவசாயிகளுக்கு ஆதரவாக இருக்க வேண்டும் எனவும் இந்த மாநாடு நடத்துவது மாநில அரசுக்கும் மத்திய அரசுக்கும் சென்று அடைய வேண்டும் என முடிவெடுத்தனர்

அந்த வகையில் இன்று காங்கிரஸ் கட்சியை சேர்ந்த எம்எல்ஏ தம்மையா பாராளுமன்ற உறுப்பினர் கோட்டா ஸ்ரீநிவாஸ் எம்எல் சி சிடி ரவி மற்றும் பகுஜன் சமாஜ் கட்சியைச் சேர்ந்த மாவட்ட தலைவர் ராதாகிருஷ்ணன் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி விவசாய சங்கத்தினர் கன்னட அமைப்பினர் ஆதிதிராவிடர்கள் பிற்படுத்தப்பட்டோர் அமைப்பைச் சேர்ந்தவர்கள் தலித் அமைப்பினர் அனைவரும் ஒன்று சேர்ந்து எந்த ஒரு கொடியும் இல்லாமல் விவசாய சங்கத்திற்குரிய பச்சை வண்ண துண்டை

போட்டுக்கொண்டு சிக்கமகளூர் தாலுகா அலவலகத்தில் இருந்து பிரம்மாண்டமான ஊரலமாக ஆசாத் பூங்கா வந்தடைந்தனர் அங்கு நடந்த மாநாட்டில் மொத்தத்தில் சிக்கமகளூர் அருகே உள்ள சுற்றுவட்டாரத்தில் இருக்கும் கிராமங்களுக்கும் மற்றும் மாவட்ட விவசாயிகளுகும் பாதுகாப்பு இல்லாமல் இருப்பதாகவும் மத்திய அரசு மாநில அரசும் விவசாயிகளுக்கு எதிராக கொண்டு வந்துள்ள தரிசு நிலம் ஆக்கிரமிப்பு மற்றும் பபர் ஜோன் வனவிலங்குகள் நடமாடும் பகுதி சுற்றுவட்டார பகுதி என நிரந்தரமாக நோட்டீஸ் வழங்குவது ஒருபுறம் சிருங்கேரி கொப்பா மூடிகெரே தாலுகாவில் நிரந்தரமாக காட்டு யானைகள் அட்டகாசம் செய்து வருவது ஒருபுறம் வனத்துறையினர் வனதுறை நிலத்தை ஆக்கிரமிப்பு செய்ததாக அந்த நிலங்களுக்கு நோட்டீஸ் கொடுக்காமலேயே முன்வந்து செடிகளை வெட்டுவது இது போன்ற அனைத்து விவசாயிகளை காப்பாற்றுவதற்கு முன்வர வேண்டும் என மாநாட்டில் முடிவெடுக்கப்பட்டது

இந்த மாநாட்டில் கலந்து கொண்ட எம்எல்ஏவும் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களும் எம் எல் சி யும் அனைவரும் சிக்கமகளூர் விவசாயிகளுக்காக சட்டமன்றம் மற்றும் பாராளுமன்றத்தின் குரல் கொடுப்பதாக உறுதி அளித்தனர் இன்று போராட்டம் நடந்த நிலையில் எங்கு பார்த்தாலும் பச்சை வண்ணமாக காட்சியளித்தது



