Ex-minister Priyank Kharge : பெண்கள் இனத்தை களங்கப்படுத்தும் பணியில் ஈடுபடுகிறார் பிரியங்க் கார்கே : பாஜக குற்றச்சாட்டு

பெங்களூரு : Ex-minister Priyank Kharge is engaged in stigmatizing the race of women : பெண்கள் இனத்தை களங்கப்படுத்தும் பணியில் ஈடுபடுகிறார் முன்னாள் அமைச்சர் பிரியங்க் கார்கே என்று கர்நாடக பாஜக எஸ்சி மோர்ச்சா தலைவரும், சட்டப் பேரவை உறுப்பினருமான சலவாதி நாராயணசாமி கண்டனம் தெரிவித்துள்ளார்.

இது குறித்து சனிக்கிழமை அவர் செய்தியாளர்களிடம் கூறியது: அரசு வேலை பெற பெண்கள் அரியணை ஏற வேண்டும் என்று பிரியங்க் கார்கே கூறியது தொடர்பான கேள்விக்கு, பப்ளிசிட்டி வெறி பிடித்து, தினமும் பத்திரிக்கை அறிக்கை கொடுக்க வேண்டும் என்பதற்காகவே இந்த வேலையை அவர் செய்திருக்கிறார். இது அவர்களுக்கு மட்டும் களங்கம் அல்ல. காங்கிரஸ் (Congress) கட்சிக்கும் களங்கம் விளைவித்துள்ளார். மல்லிகார்ஜுன கார்கே ஒரு கௌரவமான மனிதராக நாம் அனைவரும் கருதுகிறோம். அந்த குடும்பத்துக்கும் பிரியங்க் கார்கே அவப்பெயரை ஏற்படுத்தியுள்ளார். அவரது வார்த்தைகளைக் கேட்டதும் குடும்பத்தினர் வருத்தம‌டைந்திருக்க வேண்டும் என்றார்.

முட்டை ஊழலில் ஜெயமாலா ஈடுபட்டது குறித்தும், பிரியங்க் கார்கே லஞ்சம் கொடுத்ததை மேற்கோள் காட்டியும், அன்மையில் ஒரு தொலைக்காட்சி செய்தியை ஒளிபரப்பியது. அது குறித்து பிரியங்க் கார்கேவிடம் கேட்டப் போது அவர் ஏதேதோ பிதற்றி உள்ளார். விதான சவுதாவில் உள்ள புட்டரங்கஷெட்டியின் அலுவலகத்தில் கிடைத்தது பணம் இல்லையா? அவர் அங்கிருந்து தப்பிச் சென்ற போது உங்கள் ஆட்சியில் ஒன்றாக இணைந்து அவரை காப்பாற்றவில்லையா? இது ஒரு மோசடி இல்லையா? லோக்ஆயுக்தாவில் (Lokayukta) உங்கள் தலைவரான சித்தராமையா மீது இன்றும் 50 வழக்குகள் உள்ளன. அதெல்லாம் லஞ்சம் அவதாரம் இல்லையா? என்று சலவாதி நாராயணசாமி விமர்சித்தார்.

மேலும் உங்கள் தேசிய தலைவர் வேணுகோபால் (Venugopal) மீது எத்தனை வழக்குகள் உள்ளன? இதற்கு உங்கள் பதில் என்ன? இங்கே கூட காங்கிரஸ் அலுவலகத்திற்கு வரும்போது அவர்களிடமிருந்து விலகி இருங்கள் என்று கூறுவதாக நாங்கள் கேள்வி பட்டிருக்கிறோம்.பிரதமர் மோதியின் கதை என்ன என்பதற்கு என்னிடம் பதில் இருக்கிறது என்று பிரியங்க் கார்கே கிண்டல் செய்துள்ளார். வெறும் வார்த்தைகளால் பாஜக அரசை கேலி செய்வது சரியா? உங்கள் ஆட்சியின் போது மக்கள் உங்களைப் பார்த்து கூறியதை திரித்து எங்களிடம் அந்த வேலை செய்ய ஆரம்பித்து விட்டீர்கள் போலிருக்கிறது. பிரியங்க் கார்கேவுக்கு வயது முதிர்ச்சி இருந்திருந்தால் இதுபோன்ற வார்த்தைகளை பேசியிருக்க மாட்டார் அவர், ஒரு முதிர்ச்சியற்ற நபர். நீங்கள் அரசியலுக்குப் புதியவர். மற்ற‌ அரசியல்வாதிகளைப் போல் பேசி மாட்டிக் கொள்ளக் கூடாது.

அரசியலில் உங்கள் வீட்டு பெரியோர்களை பின்பற்றுங்கள். “தேசியத் தலைவரான உங்கள் தந்தையிடம் இதை நீங்கள் கற்றுக்கொண்டீர்களா? அந்த மானமுள்ள குடும்பத்தைக் கூட நீங்கள் களங்கப்படுத்தக் கூடாது. நீங்கள் செய்த அனைத்து தவறுகளும் அனைத்தும் மல்லிகார்ஜுன கார்கே (Mallikarjun Kharge) மீது சுமத்தப்பட்டது. அடுத்த தேர்தலில் மக்கள் உங்களுக்கு பாடம் புகட்டுவார்கள். பிரதமர் நரேந்திர மோடியின் அழைப்பின் பேரில், பவள சுதந்திர தின விழா தற்போது நடைபெற்று வருகிறது. அத்தகைய கொண்டாட்டத்தின் போது நீங்கள் அவரை கீழ்தரமான வார்த்தைகளைப் பயன்படுத்தி விமர்ச்சிப்பது முறையல்ல. முன்னாள் அமைச்சர் என்ற முறையில் உங்கள் தகுதிக்கு இவை சரியான வார்த்தைகளா என்பதை யோசியுங்கள்.

பிரதமரை தரைகுறைவாக விமர்ச்சித்தர்காக‌ மாநில மக்களிடம் உடனடியாக மன்னிப்பு கேட்க வேண்டும். 75 வது சுதந்திர‌ தினத்தையொட்டி காங்கிரஸ் கட்சியினர் பேரணியில் ஈடுபட்டுள்ளனர். நாங்கள் எங்கும் பாஜக கொடியை காட்டவில்லை. ஒவ்வொரு வீட்டிற்கும் தேசியக் கொடியை வழங்கினோம். அதை மக்கள் இலவசமாக பெற்று வருகின்றனர். ஆனால், காங்கிரஸ் கட்சியினர் இதற்கு போட்டியாக நடத்தும் பேரணியில் தேசியக் கொடிகளுக்கு போட்டியாக, காங்கிரஸ் கொடியுடன் காங்கிரஸ் பிரசாரக் கூட்டத்தை நடத்துவது போல சுதந்திரக் கொண்டாட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். தாவணகெரேவில் நடைபெற்ற சித்தராமையாவின் பிறந்த நாளுக்கு எதிராக டி.கே.சிவகுமார் (DK Shivakumar) தனக்கு கிடைத்த ஒரு வாய்ப்பாக சுதந்திரக் கொண்டாட்டத்தை பயன்படுத்திக் கொண்டுள்ளார். காங்கிரஸின் உண்மையான நிறத்தை அடிக்கடி வெளிப்படுத்துகிறார்கள். இது உண்மையில் ஒரு தேசிய விழா என்பதை உணர வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டார். குடியரசு தலைவர் திரௌபதி முர்முவைப் பற்றி தவறாகப் பேசுவது ஒழுக்கக்கேடான காங்கிரஸ்காரர்கள்தான் என்றார்.