Employees sudden Vomiting: காஞ்சிபுரம் அருகே தனியார் தொழிற்சாலை பெண் ஊழியர்ளுக்கு திடீர் வாந்தி மயக்கம்

காஞ்சிபுரம்: A female employee of a private factory near Kancheepuram suffered from sudden vomiting and fainting. காஞ்சிபுரம் அருகே தனியார் தொழிற்சாலை பெண் ஊழியர்ளுக்கு திடீர் வாந்தி மயக்கம் ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

காஞ்சிபுரம் மாவட்டம், வாலாஜாபாத் அடுத்த ஊத்துக்காடு கூட்ரோடு பகுதியில் டூவீலர் மற்றும் கார்களின் உதிரி பாகங்கள் தயாரிக்கும், மதர்சன் சுமி சிஸ்டம்ஸ் லிமிடெட் என்ற தனியார் தொழிற்சாலை இயங்கி வருகிறது. இந்த தொழிற்சாலைக்கு வாலாஜாபாத் மற்றும் அதனை சுற்றுவட்டாரப்பகுதிகளைச் சேர்ந்த ஏராளமானோர் பணிபுரிந்து வருகின்றனர்.

பணிபுரியும் தொழிற்சாலை ஊழியர்களுக்கு உணவு வழங்குவதற்காக கேண்டீன் ஒன்று தொழிற்சாலை வளாகத்திலேயே இயங்கி வருகிறது. இந்த கேண்டீனில் நேற்று இரவு பணிபுரிந்த சுமார் 3ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்களுக்கு இரவு நேர உணவு வழங்கிய நிலையில், அதனை சாப்பிட்ட 30க்கும் மேற்பட்டோருக்கு திடீரென வாந்தி மயக்கம் ஏற்பட்டுள்ளது. விசாரணையில் அவர்களுக்கு வழங்கப்பட்ட உணவில் பல்லி விழுந்ததாக கூறப்படுகிறது.

இது குறித்து தகவலறிந்த தொழிற்சாலை நிர்வாகம், உடனடியாக வாந்தி மயக்கமடைந்த சுமார் 30க்கும் மேற்பட்ட பெண்களை உடனடியாக தொழிற்சாலை பேருந்து மற்றும் ஆம்புலன்ஸ் மூலம் வாலாஜாபாத் பகுதியில் இயங்கு வரும் தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

இதனைத்தொடர்ந்து தனியார் மருத்துவமனையில் சற்று கடுமையாக பாதிக்கப்பட்ட சில பெண்கள் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்படும்,மீதமுள்ளவர்கள் பொது பிரிவிலும் அனுமதிக்கப்பட்டு அவர்களுக்கு அங்கு தொடர்ந்து மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர்.

இருந்தபோதிலும் தற்போது வரையில் உயிருக்கு ஆபத்தான நிலையில் யாரும் சிகிச்சை பெறவில்லை என தனியார் மருத்துவமனை மற்றும் தொழிற்சாலை நிர்வாகாம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொழிற்சாலையில் பல்லி இருந்த இரவு உணவு உண்டவர்களில் சுமார் 30பெண்களுக்கு திடீரென வாந்தி மயக்கம் ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவது தொழிற்சாலையில் இரவு சிப்ட்டில் பணி புரிந்தவர்களிடையே கடும் பீதியையும், அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

இதனையடுத்து, தொழிற்சாலையில் இரவு நேர சிப்ட் நிறுத்தப்பட்டு இரவு நேர சிப்டில் இருந்த அனைவரையும் தொழிற்சாலை நிர்வாகமானது வீட்டிற்கு அனுப்பி வைத்துள்ளது. மேலும் இது குறித்து தகவலறிந்து பாதுகாப்பிற்காக காஞ்சிபுரம் காவல் உட்கோட்ட டி.எஸ்.பி. ஜூலியர் சீசர் தலைமையில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

இச்சம்பவம் குறித்து வாலாஜாபாத் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். காலை நிலவரப்படி அனைவரும் சிகிச்சை பெற்று வீடு திரும்பினர் என்றும் உள்ள தனியார் கேட்டரிங் நிறுவனம் உணவு தயாரித்து இந்நிறுவனத்திற்கு சப்ளை செய்து வருவதாகவும் கூறப்படுகிறது.