DGP Sylendra babu :தேவர் ஜெயந்தி விழாவில் பாதுகாப்பு பணியில் சிறப்பாக செயல்பட்ட போலீசாருக்கு டிஜிபி பாராட்டு

சென்னை: DGP Sylendra babu Appreciates Police for Good Performance in Security on Devar Jayanthi : தேவர் ஜெயந்தி விழாவில் சிறு மோதல் சம்பவங்கள் கூட இல்லாமல் சிறப்பாக பாதுகாப்பு பணி மேற்கொண்ட 10 ஆயிரம் போலீசாருக்கு டிஜிபி சைலேந்திரபாபு பாராட்டு தெரிவித்துள்ளார்.

இது குறித்து தமிழக டிஜிபி சைலேந்திரபாபு வெளியிட்டுள்ள அறிக்கை தமிழ்நாட்டின் பாதுகாப்பு முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வான தேவர் ஜெயந்தி விழா (Devar Jayanti Festival) கடந்த அக். 30 ஆம் தேதி நடைபெற்றது. பாதுகாப்பு பணியில் சட்ட ஒழுங்கு காவல்துறை கூடுதல் டிஜிபி தாமரைக் கண்ணன் மேற்பார்வையில் தென் மண்டல ஐஜி அஸ்ரா கர்க், மதுரை மாநகர போலீஸ் கமிஷனர் செந்தில்குமார் தலைமையில் ராமநாதபுரம் சரக டிஐஜி மயில்வாகனன், 24 மாவட்ட‌ எஸ்பிக்கள் உட்பட 10 ஆயிரம் காவல் அதிகாரிகள் மற்றும் போலீசார் ஒரு சிறு மோதல் சம்பவம் கூட ஏற்படா வண்ணம் நல்ல முறையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் சிறப்பாக செய்து முடித்துள்ளீர்கள்.

உங்களது இந்த சாதனையின் மூலம் நமது தமிழக காவல் துறைக்கு பெருமையை சேர்த்து உள்ளீர்கள். பாதுகாப்பு பணியில் நாட்டிற்கே ஒரு முன்னுதாரணமாக இருந்துள்ளீர்கள். மிகுந்த ஈடுபாட்டுடனும், உற்காகத்துடனும், அர்ப்பணிப்பு உணர்வு உடனும் இப்ப‌ணியில் கடமையாற்றிய அனைத்து அதிகாரிகளுக்கும், காவலர்களுக்கும் பாராட்டுக்களையும் நன்றியையும் தெரிவித்து கொள்கிறேன் (I appreciate and thank the officers and guards). நீங்கள் தொடர்ந்து மகிழ்ச்சியுடன் கடமையாற்ற வாழ்த்துக்கிறேன் என்று இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

தேவர் ஜெயந்தி தமிழ்நாட்டில் ஆண்டுதோறும் கொண்டாடப்படும் ஒரு முக்கிய நிகழ்வு ஆகும். தேவர் சமுதாயத்தினரால் உ.முத்துராமலிங்கத் தேவர் பிறந்த நாளை (Muthuramalingath Devar’s birthday) நினைவுகூரும் நிகழ்வு இது. இதற்கு அரசு விடுமுறை இல்லை என்றாலும், தமிழகத்தின் தென் மாவட்டங்களில் உள்ள பல வணிக நிறுவனங்கள் மற்றும் பள்ளிகள் கூட அன்றைய தினம் மூடப்படுவது வழக்கம்.முக்குலத்தோர் சமூகத்தினர் தமிழ்நாட்டின் மத்திய மற்றும் தென் மாவட்டங்களில் அதிகமாக வாழ்கின்றனர்.

அந்த சமூகத்தின் மிகவும் பிரபலமான பிரதிநிதிகளில் ஒருவர் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் என்று அழைக்கப்படும் உ.முத்துராமலிங்கத் தேவர் ஆவார். 20 ஆம் நூற்றாண்டு தமிழக அரசியலில் குறிப்பிடத்தக்க பங்கு வகித்த ஒரு சோசலிஸ்ட். அவர் கிரிமினல் பழங்குடியினர் சட்டத்திற்கு எதிராக பிரச்சாரம் செய்தார், தொழிலாளர் இயக்கம் மற்றும் கோவில் நுழைவு இயக்கத்தை ஆதரித்தார். மேலும் நாடாளுமன்றத்திற்கு மூன்று முறை தேர்ந்தெடுக்கப்பட்டார் (He was elected to Parliament three times) என்பது குறிப்பிடத்தக்கது.