Deve Gowda’s great-grandson first birthday: தேவேகவுடாவின் கொள்ளுப் பேரன் அவ்யன் தேவ்வின் முதல் பிறந்தநாள்: குடும்பத்தினர் மகிழ்ச்சி

பெங்களூரு: Deve Gowda’s great-grandson Avyan Dev’s first birthday, Family rejoices :மதச்சார்பற்ற ஜனதா தளக் (மஜத)கட்சியின் இளைஞரணி தலைவர் நிகில் குமாரசாமி மகனும், முன்னாள் பிரதமர் தேவேகவுடாவின் கொள்ளுப்பேரனும், முன்னாள் முதல்வர் எச்.டி.குமாரசாமி-அனிதா குமாரசாமியின் பேரனுமான அவ்யன் தேவ் வின் பிறந்த நாள் விழா சனிக்கிழமை கொண்டாடப்பட்டது.

சனிக்கிழமை காலை நிகில் குமாரசாமி தனது குடும்பத்தினருடன் ராமநகரில் உள்ள ஸ்ரீ சாமுண்டேஸ்வரி அம்மன் கோவில் மற்றும் ஸ்ரீ அபய ஆஞ்சநேய சுவாமி (Sri Samundeswari Amman Temple and Sri Abhaya Anjaneya Swamy in Ramanagara) கோவிலுக்கு சென்று தனது மகனின் பெயரில் சிறப்பு பூஜை செய்து பிரார்த்தனை செய்தார். பின்னர், ரசிகர்கள் மற்றும் மஜத‌ கட்சியினர் அங்கு பிறந்த நாள் கேக் வெட்டி அவ்யன் தேவுக்கு வாழ்த்து தெரிவித்தனர். இந்நிகழ்வில் அனிதா குமாரசாமி மற்றும் நிகில் குமாரசாமியின் மனைவி ரேவதி ஆகியோரும் கலந்து கொண்டனர்.

மாலையில் முன்னாள் பிரதமர் எச்.டி.தேவே கவுடா (Former Prime Minister HD Deve Gowda) வீட்டில் கேக் வெட்டி அவ்யன் தேவ் பிறந்த நாள் கொண்டாடப்பட்டது. இந்நிகழ்ச்சியில், எச்.டி.தேவே கவுடா மற்றும் சென்னம்மா தேவகவுடா ஆகியோர், குழந்தையை ஆசிர்வதித்தனர். நிகில் குமாரசாமி, ரேவதி ஆகியோர் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.

இதேபோல், முன்னாள் முதல்வர் எச்.டி.குமாரசாமி மற்றும் அனிதா குமாரசாமி (Former Chief Minister HD Kumaraswamy and Anita Kumaraswamy) வீட்டில் பேரனின் பிறந்தநாள் எளிமையாக கேக் வெட்டி கொண்டாடப்பட்டது. இந்நிகழ்வில் நிகில் குமாரசாமி மற்றும் ரேவதி ஆகியோர் கலந்து கொண்டனர்.

அண்மைக் காலமாக முன்னாள் பிரதமர் எச்.டி.தேவேகவுடாவின் உடல் நிலை சரியில்லததால், அவரை முதல்வர் பசவராஜ் பொம்மை (CM Basavaraj Bommai ), எதிர்க்கட்சித் தலைவர் சித்தராமையா, அமைச்சர் ஆர்.அசோக் உள்ளிட்டோர் தேவேகவுடாவின் இல்லத்திற்கு சென்று, அவரது உடல் நலத்தை விசாரித்து வந்தனர். இந்த நிலையில் அவரது கொள்ளுப் பேரனின் பிறந்த நாள் கொண்டாடப்பட்டதால், அவரது குடும்பத்தில் மகிழ்ச்சி ஏற்பட்டுள்ளது.