Cyclone ‘Mantus’: வங்கக்கடலில் உருவாகுது ‘மாண்டஸ்’ புயல்

சென்னை: Cyclone ‘Mantus’ is forming in the Bay of Bengal. வங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று புயலாக உருமாறும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவிக்கையில், தென்கிழக்கு வங்கக்கடலில் நிலைகொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறி இன்று மாலை புயலாக வலுப்பெறுகிறது. இந்த புயல் நாளை வட தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் அதனை ஒட்டிய பகுதி வழியாக நகர்ந்து தென்மேற்கு வங்காள விரிகுடாவை அடையும்.

இதனால், வட கடலோர தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் அதை ஒட்டிய தெற்கு ஆந்திர கடலோர பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது. குறிப்பாக, நாளை மறுநாள் வட தமிழ்நாடு, ஆந்திரா உள்ளிட்ட பகுதிகளில் கனமழை முதல் மிக கனமழை பெய்யும் என கணிக்கப்பட்டுள்ளது.

மேலும் ஒரு சில இடங்களில் அதிக கனமழையும் பெய்ய வாய்ப்பு உள்ளதால், தமிழகம், ஆந்திரா உள்ளிட்ட பகுதிகளுக்கு நாளை மறுநாள் ரெட் அலெர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இன்று மாலை உருவாகும் புயலுக்கு ”மாண்டஸ் புயல்” என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.