Cyclone Asani: மே 10-ம் தேதி வங்கக்கடலில் உருவாகிறது அசானி புயல்

மே 10-ம் தேதி வங்கக்கடலில் உருவாகிறது அசானி புயல்
மே 10-ம் தேதி வங்கக்கடலில் உருவாகிறது அசானி புயல்

Cyclone Asani: வங்கக்கடலில் தெற்கு அந்தமானை ஒட்டிய பகுதியில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது. இது வடமேற்கு திசையில் நகர்ந்து இரண்டு நாட்களில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது.

இந்நிலையில், வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வுப்பகுதி தாழ்வு மண்டலமாக உருவாகி புயலாக மாறும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மே 10-ம் தேதி ஆந்திரா- ஒடிசா கடற்கரை ஒட்டிய மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதியில் புயல் உருவாகும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அந்தமான் மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிக்கு நாளை வரை மீனவர்கள் செல்ல வேண்டாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், தாழ்வு மண்டலம் புயலாக மாறினால் அசானி என பெயர் வைக்கப்படும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதையும் படிங்க: ஏ.டி.எம். எந்திரத்தை உடைத்து ரூ.4¾ லட்சம் துணிகர கொள்ளை