Cyclone Alert: 6 மாவட்டங்களுக்கு விரைந்தது தேசிய பேரிடர் மீட்பு படை

சென்னை: National Disaster Response Team has rushed to 6 districts including Chennai due to storm warning in Tamil Nadu. தமிழகத்திற்கு புயல் எச்சரிக்கை காரணமாக சென்னை உள்ளிட்ட 6 மாவட்டங்களுக்கு தேசிய பேரிடர் மீட்புக்குழு விரைந்துள்ளது.

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை மீண்டும் தீவிரமடைந்துள்ளது. கடந்த மாதம் காற்றழுத்த தாழ்வு பகுதி ஆழ்ந்த தாழ்வு பகுதியாக மாறியது. இதனால் சென்னையில் மிக கனமழையை பெய்தது. தொடர்ந்து டெல்டா மாவட்டங்களிலும் கனமழை பெய்தது. இதையடுத்து தமிழகத்தில் கடந்த சில நாட்களாக போதிய மழை இல்லை.

இந்தநிலையில் அந்தமான் அருகே நேற்று புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி உள்ளதாகவும், இது வரும் நாட்களில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக உருவெடுக்கும். காற்றழுத்த தாழ்வு பகுதி வலுப்பெற்று வங்கக் கடலில் டிசம்பர் 8ம் தேதி புயலாக உருவாக வாய்ப்புள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.

அடுத்த 48 மணி நேரத்தில் இந்த தாழ்வு பகுதி நகர தொடங்கும். தாழ்வு மண்டலமாக இது வலுப்பெற்று மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து செல்லும். காற்றழுத்த தாழ்வு மண்டலமாக தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியை அடைந்து அங்கு வலிமைபெற்று மையம் கொண்டு நிற்கும். இது நிலத்தில் இருந்து நீண்ட தூரத்தில் உள்ளது.

தற்போது அது புயலாக மாறுவதற்கு ஏற்ற சூழ்நிலைகள் நிலவி வருகின்றன. இதனால் 3 நாட்களில் கண்டிப்பாக இது புயலாக உருவெடுக்கும். வங்கக் கடலில் புதிதாக உருவாகும் புயலுக்கு மாண்டஸ் என பெயர் வைக்கப்பட உள்ளது. வங்கக் கடலில் உருவாகும் புயலுக்கு ஐக்கிய அரபு அமீரகம் பரிந்துரைத்த பெயர் வைக்கப்படவுள்ளது.

இந்த தாழ்வு பகுதிக்கு முன்பாக நேற்று கிழக்கு காற்று காரணமாக தமிழ்நாட்டில் கனமழை பெய்தது. டெல்டா மாவட்டங்களில் முக்கியமாக கனமழை பெய்தது. திருவாரூர், தஞ்சாவூர், நாகப்பட்டினம், கும்பகோணம் ஆகிய பகுதிகளில் மிக கனமழை பெய்தது.

தமிழகத்தில் புயல் எச்சரிக்கை காரணமாக, 6 மாவட்டங்களுக்கு தேசிய பேரிடர் மீட்பு படை விரைகிறது. அதாவது சென்னை, நாகை, தஞ்சை, திருவாரூர், கடலூர், மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களுக்கு இந்த குழு விரைகிறது.