Courtralam waterfalls: குற்றால மெயின் அருவியில் வெள்ளப்பெருக்கு: சுற்றுலா பயணிகள் குளிக்க தடை

தென்காசி: Tourists have been banned from bathing due to flooding in Courtralam waterfalls. குற்றால அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் சுற்றுலாப் பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

தென்காசி மாவட்டம், குற்றாலம் மெயின் அருவி, பழைய அருவியில் குளிக்க தடை. வெள்ளப்பெருக்கு காரணமாக அருவிகளில் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

தென்காசி மாவட்டத்தில் நேற்று மாலை முதல் குற்றாலம், செங்கோட்டை, பாவூர்சத்திரம், கடையம், ஆலங்குளம் ,கடையநல்லூர் ஆகிய சுற்றுவட்டார பகுதிகளில் தொடர் மழை பெய்தது. மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பெய்து வரும் தொடர் மழையின் காரணமாக குற்றால அருவிகளில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. குறிப்பாக மெயின் அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் சுற்றுலா பயணிகள் குளிக்க காவல்துறையினர் மற்றும் மாவட்ட நிர்வாகத்தினர்தடை விதித்துள்ளனர்.

பழைய குற்றாலத்திலும் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில் ஐந்தருவி பகுதியில் மட்டும் நீர்வரத்து சீராக உள்ளதால் அங்கு பயணிகள் குளிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மீண்டும் வெள்ளப்பெருக்கு குறைந்து நீர் வரத்து சீரான பின்பு அருவிகளில் குளிக்க அனுமதி வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே சபரிமலை சீசன தொடங்கி ஐயப்ப பக்தர்கள் ஏராளாமானோர் இங்கு குளிப்பதற்கான வந்த நிலையில் அவர்களும் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர்.