Courtralam falls again banned: குற்றாலம் அருவிகளில் குளிக்க மீண்டும் திடீர் தடை

தென்காசி: Bathing in Courtralam waterfalls is again banned: குற்றாலம் அருவிகளில் குளிக்க மீண்டும் திடீர் தடை விதித்து மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.

தென்காசி மாவட்டத்தில் குற்றால அருவிகளில் தற்போது சீசன் நன்றாக உள்ளது. இதனால் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், அண்டை மாநிலமான கேரளாவில் இருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள் தினமும் குற்றாலத்திற்கு படையெடுத்தபடி உள்ளனர்.

அவர்கள் இங்குள்ள மெயின் அருவி, ஐந்தருவி, பழைய குற்றாலம், புலியருவி (Main falls, Five Falls, Old Courtalam, Puliyaruvi) உள்ளிட்ட அருவிகளில் உற்சாகமாக குளித்து மகிழ்கிறார்கள்.

கடந்த 3 நாட்களுக்கு முன் குற்றாலம் மெயின் அருவியில் கனமழை காரணமாக (Heavy Rains) திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் அருவியில் குளித்துக் கொண்டிருந்த 5 பேர் தண்ணீரில் அடித்து செல்லப்பட்டுள்ளனர். அங்கு பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் அவர்களை மீட்க போராடினர். ஆனால் ஒருவரை மட்டுமே அவர்களால் மீட்க முடிந்தது.

இதனிடையே இருவர் தடுப்புகளை பிடித்து வெள்ளத்திலிருந்து தப்பினர். மீதமுள்ள 2 பெண்கள் வெள்ளத்தில் அடித்துச்செல்லப்பட்டு பாறைகளில் மோதி பலத்த காயங்களுடன் உயிரிழந்தனர்.

இதுகுறித்து தீயணைப்புத்துறையினருக்கும் போலீசாருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. விரைந்து வந்த தீயணைப்பு மற்றும் மீட்பு படையினர் உயிரிழந்தவ பெண்கள் இருவரின் உடலை மீட்டனர்.

அதேபோல் குற்றாலம் அருவிகளில் இதற்கு முன்பு முதலுதவி சிகிச்சை மையம் (First aid treatment center) இருந்து வந்தது. ஆனால் தற்போது இல்லாத சூழலால் அவசர முதலுதவி கொடுக்க முடியவில்லை என கூறப்படுகிறது. குற்றால அருவியில் திடீரென ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் பெண்கள் இருவர் அடித்துச் செல்லப்பட்டுள்ளது அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது. இந்த சம்பவத்தால் குற்றால அருவிகளில் குளிக்க தடை விதித்து மாவட்ட ஆட்சியர் ஆகாஷ் உத்தரவிட்டிருந்தார்.

இதனிடையே மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் மழை அளவு குறைந்தது தொடர்ந்து குற்றால அருவிகளில் தண்ணீர் வரத்து குறையத் தொடங்கியது. இதனையடுத்து 3 நாட்கள் தடை விதித்த நிலையில், குற்றால அருகில் குளிக்க மாவட்ட நிர்வாகம் மூலம் அனுமதி அளித்தது. எனவே குற்றாலத்திற்கு சுற்றுலா செல்லும் பயணிகள், பாதுகாப்புடனும், எச்சரிகையுடனும் அருவில் குளிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள் என தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், கேரளாவில் அச்சன்கோவில் அருகே உள்ள கும்பாவுருட்டி அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதைத் தொடர்ந்து பாதுகாப்பு கருதி குற்றாலம் அருவிகளில் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. கும்பாவுருட்டி அருவி வெள்ளத்தில் சிக்கி ஒருவர் உயிரிழந்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

கடும் வெள்ளப்பெருக்கு காரணமாக கடந்த இரு நாட்களாக குற்றால அருவிகளில் குளிக்க தடை விதிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் இன்று காலை வெள்ளாப்பெருக்கு குறைந்ததால் அந்த தடை நீக்கப்பட்டது குறிப்பிடதக்கது. இதனிடையே குற்றாலத்தில் 3 ஆண்டுகளுக்குப் பிறகு சாரல் திருவிழா நடைபெறவுள்ளது.

வரும் ஆகஸ்ட் 5 முதல் 12 ஆம் தேதி வரை 8 நாட்கள் நடக்கிறது. இதனை வருவாய்த்துறை அமைச்சர் கே கே எஸ் எஸ் ஆர் ராமச்சந்திரன் துவக்கி வைக்கிறார்.ஆகஸ்ட் 5 முதல் 10 நாட்கள் குற்றாலம் பராசக்தி கல்லூரியில் புத்தக கண்காட்சி நடத்தவும் அரசு திட்டமிட்டுள்ளது.