Coronavirus Spread Echo Emergency Rehearsal: கொரோனா அதிகரிப்பு: தமிழக மருத்துவமனையில் அவசர கால ஒத்திகை

சென்னை: சீனா, ஐப்பான், தென்கொரியா (Coronavirus Spread Echo Emergency Rehearsal) உள்ளிட்ட சில நாடுகளில் பி.எப்.7 என்ற புதிய வகை கொரோனா வைரஸ் தொற்று வேகமெடுத்து வருகிறது. இது போன்ற வைரஸ்கள் மிக கடுமையான பாதிப்புகளையும் ஏற்படுத்தி வருவதாக கூறப்படுகிறது. இதனால் சீனா உள்ளிட்ட நாடுகள் என்ன செய்வது என்று தெரியாமல் புலம்பி வருகிறது.

இந்நிலையில், இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றின் பரவலை கட்டுப்படுத்துவதற்கான முயற்சியில் மத்திய அரசு தீவிரம் கவனம் செலுத்தி வருகிறது. அதன்படி வெளிநாடுகளில் இருந்து இந்தியாவுக்கு வரும் அனைத்து பயணிகளையும் தீவிரமாக பரிசோதனை செய்யப்பட்டு பின்னரே அவரவர் வீடுகளுக்கு அனுமதிக்கபடுகின்றனர்.

அதே போன்று நாடு முழுவதும் இருக்கின்ற அனைத்து அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் இன்று காலை முதலே அவசர கால ஒத்திகை தொடங்கியுள்ளது. அதன்படி சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் தொடங்கி வைத்துள்ளார்.

இந்த ஒத்திகையின் போது மருத்துவமனையில் இருக்கின்ற படுக்கை வசதிகள், ஆக்சிஜன் வசதி, மருந்து மாத்திரை இருப்பு, கொரோனா சிகிச்சையின் போது பயிற்சி பெற்ற மருத்துவர்கள், செவிலியர்கள் எண்ணிக்கை மற்றும் தீவிர பாதிப்புக்கு உள்ளான சமயத்தில் சிகிச்சை அளித்த பயிற்றி பெற்ற மருத்துவர்கள் உள்ளிட்ட அனைத்து வசதிகளையும் ஆய்வு செய்து உறுதிப்படுத்த வேண்டும்.

மேலும் அனைத்து வகையிலான மருத்துவ கட்டமைப்பு வசதிகளையும் தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும். முன்கள பணியாளர்கள் பற்றிய விபரங்களும் சேகரிக்கப்பட வேண்டும் என கூறப்பட்டுள்ளது. இது போன்ற எல்லா வசதிகளும் இருக்கிறதா என்ற கள நிலவரங்களை தயார் செய்து 12 மணி நேரத்திற்குள் வழங்க வேண்டும் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.