Corona vaccination camp: தமிழகத்தில் இன்று 1 லட்சம் இடங்களில் கொரோனா தடுப்பூசி முகாம்

மத்திய சுகாதார அமைச்சகம்
மத்திய சுகாதார அமைச்சகம்

Corona vaccination camp: தமிழகத்தில் மீண்டும் கொரோனா தடுப்பூசி முகாம் இன்று நடைபெற்று வருகிறது. இதற்காக 1 லட்சம் இடங்களில் முகாம் அமைக்கப்பட்டுள்ளது.

இந்திய மக்களுக்கு இதுவரை செலுத்தப்பட்டுள்ள கொரோனா தடுப்பூசி டோஸ்களின் எண்ணிக்கை 190 கோடியை கடந்துள்ளது. மத்திய அரசு, மாநில அரசுகள் கொரோனா வைரஸ் பரவலை தடுக்க பல்வேறு நடவடிக்கைளை எடுத்து வருகின்றது. கைகளை நன்கு கழுவுதல் , மாஸ்க் அணிதல் , தடுப்பூசி முகாம் , நடமாடும் தடுப்பூசி முகாம் என இந்தியா முழுமையும் கொரோனா வைரஸை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் ஏற்படுத்தப் பட்டு வந்தன.

நாடு முழுவதும் கடந்த ஆண்டு ஜனவரி மாதம் 16ம் தேதி முதல் கொரோனாவுக்கு எதிரான தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. தமிழகத்தை பொறுத்தவரை தமிழக அரசு மெகா தடுப்பூசி முகாம்களை நடத்தி வந்ததன் காரணமாக கொரோனா தொற்று பெரியளவில் குறைந்தது.

தற்போது மீண்டும் கொரோனா பாதிப்பு மெல்ல அதிகரித்து வரும் சூழலில், தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கையை மீண்டும் துரிதப்படுத்தியுள்ளது. அதன்படி, தமிழகம் முழுவதும் மெகா தடுப்பூசி முகாம் இன்று 1 லட்சம் இடங்களில் நடைபெறுகிறது. காலை 7 மணி முதல் இரவு 7 மணி வரை நடைபெறும் இந்த தடுப்பூசி முகாமில் தடுப்பூசி செலுத்திக்கொள்ளாதவர்களுக்கும், காலக்கெடு முடிந்தும் 2-வது தவணை செலுத்தாதவர்களுக்கும் முன்னுரிமை அளிக்கப்படுகிறது.

கொரோனா தடுப்பூசி முகாம்கள் கிராமங்களிலும் , நகரங்களிலும் செலுத்தப்படுகிறது. எனவே தடுப்பூசி முகாமை தவறாமல் பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என பொது சுகாதாரத்துறை அதிகாரிகள் அறிவுறித்தியுள்ளனர்.

இதையும் படிங்க: Cyclone Asani: வங்க கடலில் உருவானது ‘அசானி’ புயல்