Corona confirmed to M.K. Stalin : தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலினுக்கு கரோனா தொற்று உறுதி

சென்னை : Corona confirmed to TN CM M.K. Stalin தமிழக முதல்வர் ஸ்டாலினுக்கு கரோனா தொற்று செவ்வாய்க்கிழமை உறுதி செய்யப்பட்டுள்ளது.

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு (M.K. Stalin) கரோனா தொற்று செவ்வாய்க்கிழமை உறுதி செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து அவர் சுட்டுரையில், இன்று உடல் சோர்வு சற்றிருந்தது. இதனையடுத்து பரிசோதனை செய்து கொண்டதில் கரோனா உறுதி செய்யப்பட்டது. இதனையடுத்து என்னை தனிமைப்படுத்திக் கொண்டேன்.

எனவே அனைவரும் முககவசம் அணிவதோடு, தடுப்பூசிகளை செலுத்திக் கொண்டு பாதுகாப்பாய் இருப்போம் என்று அவர் அதில் பதிவிட்டுள்ளார். கடந்த சில நாள்களாக முதல்வர் மு.க.ஸ்டாலின் (M.K. Stalin) தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு, நலத்திட்ட உதவிகளை வழங்கி வந்தார்.

செவ்வாய்க்கிழமை காலை செங்கல்பட்டு மாவட்டத்தில் ரூ. 75 கோடி மதிப்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் மழை நீர் வடிகால் மற்றும் வெள்ளத் தடுப்புப் பணிகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் (M.K. Stalin) ஆய்வு செய்தார்.

அதனைத் தொடர்ந்து மாமல்லபுரம் பூஞ்சேரியில் நடைபெற உள்ள செஸ் ஒலிம்பியாட் போட்டி நடைபெறும் விளையாட்டு அரங்கை பார்வையிட்டார். முதல்வர் மு.க. ஸ்டாலினுக்கு (M.K. Stalin) கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டத்தையடுத்து, செவ்வாய்க்கிழமை அவருடன் சென்றவர்கள் அனைவரையும் கரோனா பரிசோதனைக்கு உட்படுத்துமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

அண்மைக்காலமாக கரோனா தொற்றின் பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. சென்னையில் நாள்தோறும் கரோனா தொற்றிற்கு சுமார் ஆயிரத்திற்கும் அதிகமானோருக்கு உறுதி செய்யப்பட்டு வருகிறது. தமிழகத்தில் திங்கள்கிழமை கரோனா தொற்றால் 2,448 பேர் பாதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.