contract to develop driverless metro trains: ஓட்டுனர் இல்லா மெட்ரோ மெட்ரோ ரயில்களை உருவாக்க ரூ.946.92 கோடியில் ஒப்பந்தம்

சென்னை: Rs.946.92 crore contract to develop driverless metro trains. ஓட்டுனர் இல்லா மெட்ரோ மெட்ரோ ரயில்களை உருவாக்க ரூ.946.92 கோடியில் சென்னை மெட்ரோ ஒப்பந்தம் செய்துள்ளது.

சென்னை மெட்ரோ இரயில் திட்டம் கட்டம்-II இன் கீழ், ஒட்டுனர் இல்லாமல் இயக்கப்படும் 3 பெட்டிகளை கொண்ட 26 மெட்ரோ ரயில்களை (மொத்தம் 78 பெட்டிகள்) உருவாக்கும் ஒப்பந்தம் திருவாளர் அல்ஸ்டோம் டிரான்ஸ்போர்ட் இந்தியா நிறுவனத்திற்கு ரூபாய் தொள்ளாயிரத்து 46 கோடியே 92 லட்சம் மதிப்பில் (வரிகள் உட்பட), நேற்று சென்னை அண்ணாசாலை நந்தனத்தில் அமைந்துள்ள மெட்ரோஸ், தலைமை அலுவலகத்தில் கையெழுத்திட்டு வழங்கப்பட்டுள்ளது.

சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் மேலாண்மை இயக்குனர் சித்திக் முன்னிலையில், சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் இயக்குனர் ராஜேஷ் சதுர்வேதி (அமைப்புகள் மற்றும் இயக்கம்) மற்றும் திருவாளர் அல்ஸ்டோம் டிரான்ஸ்போர்ட் இந்தியா நிறுவனத்தின் வர்த்தக இயக்குனர் ராஜீவ் ஜோய்சர் ஆகியோர் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்.

இந்த ஒப்பந்தத்தின் நோக்கம், வடிவமைப்பு, உற்பத்தி, சோதனை, தரமான மெட்ரோ ரயில் இயக்குதலுக்கான தகுதி, பணியாளர்களுக்கு பயிற்சி, உதிரி பாகங்கள் வழங்கல் மற்றும் குறைபாடு பொறுப்பு உள்ளிட்ட ஒட்டுனர் இல்லாத மெட்ரோ ரயில்களை வழங்குதல் போன்றவை உள்ளடங்கும்.

இந்த ஒப்பந்ததின் கீழ் முதல் மெட்ரோ ரயில் 2024-ஆம் ஆண்டில் சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்திடம் ஒப்படைக்கப்படும். அதைத் தொடர்ந்து கடுமையான பாதைகள் மற்றும் ஓட்டுநர் இல்லாத ரயில் இயக்கத்திற்கான சோதனைகள் நடத்தப்படும். அதன்பின் மீதமுள்ள அனைத்து மெட்ரோ ரயில்களும் நவம்பர் 2024 முதல் ஆகஸ்ட் 2025 வரை ஒரு வருடத்திற்குள் ஒவ்வொரு கட்டமாக சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்திடம் ஒப்படைக்கப்படும்.

இந்நிகழ்ச்சியில், சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் இயக்குநர் டாக்டர். பிரசன்ன குமார் ஆச்சார்யா (நிதி), தலைமை பொது மேலாளர் ஏ.ஆர்.ராஜேந்திரன் (தொடர்வண்டி மற்றும் இயக்கம்), உயர் அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் பங்கேற்றனர்.