construction warehouse collapsed : கிடங்கு கட்டுமானப் பணியின் போது சுவர் இடிந்து விழுந்து, இடிபாடுகளில் சிக்கி 5 பேர் பலி

தில்லி: warehouse collapsed and 5 people were killed :தில்லி அலிபூரில் வெள்ளிக்கிழமை கிடங்கு ஒன்றின் கட்டுமானப் பணி நடைபெற்றுக் கொண்டிருந்தப்போது திடீரென அதன் சுவர் இடிந்து விழுந்தது. இதில் 5 பேர் உயிரழந்தனர். காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். இடிபாடுகளில் மேலும் பலர் சிக்கியிருக்கலாம் என்று அஞ்சப்படுவதால் அவர்களை மீட்கும் பணியின் தீயணைப்பு படையினர் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர்.

இடிபாடுகளில் சிக்கி காயமடைந்த சிலர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இடிபாடுகளில் மேலும் சிலர் சிக்கியிருக்கலாம் என அஞ்சப்படுவதால் மீட்பு பணி தொடர்கிறது என தில்லி போலீசார் (Delhi Police) தெரிவித்துள்ளனர். சம்பவ இடத்தில் தீயணைப்பு படையினர் 4 வாகனங்களில் வந்து, தொடர்ந்து மீட்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இறந்தவர்களின் குடும்பங்களுக்கு தில்லி மாநில முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் (Arvind Kejriwal) இரங்கல் தெரிவித்துள்ளதோடு, மாவட்ட நிர்வாகம் நிவாரணம் மற்றும் மீட்புப் பணிகளில் தொடர்ந்து ஈடுபட்டு வருவதாகவும். இடிபாடுகளில் சிக்கி உள்ளவர்களை மீட்கும் பணிகளை நேரில் கண்காணித்து வருவதாகவும் தெரிவித்துள்ளார். இறந்தவர்களின் குடும்பங்களுக்கு நிவாரணம் தருவது தொடர்பாகவும் ஆலோசித்து வருவதாக அவர் தெரிவித்துள்ளார்.

இச்சம்பவம் அலிபூரில் உள்ள சௌஹான் தரம்கடா அருகே உள்ள பகௌலி கிராமத்தில் நடைபெற்றுள்ளது. இடிபாடுகளில் சிக்கி உள்ளவர்களை மீட்பதோடு, இடுபாடுகளை அகற்றும் பணிகளும் (Debris clearance) தொடர்ந்து நடைபெற்று வருகின்றன‌.