Constable selection started in Kanchipuram: காஞ்சிபுரத்தில் தொடங்கியது காவலர் தேர்வு

காஞ்சிபுரம்: The examination for the vacant constable posts in the Tamil Nadu Police and other departments has started today. தமிழக காவல்துறை உள்ளிட்ட துறைகளில் காலியாக உள்ள காவலர் பணியிடங்களுக்கான தேர்வு இன்று தொடங்கியது.

காஞ்சிபுரம் மாவட்ட விளையாட்டு அரங்கில் 787 பங்கேற்ற காவலர்களுக்கான தேர்வு இன்று துவங்கியது.தேர்வு பணிகளை காஞ்சி சரக காவல்துறை துணை தலைவர் , எஸ்.பி ஆகியோர் ஆய்வு செய்தனர்.

தமிழக சீருடை பணியாளர் தேர்வாணையம் மூலம் காவலர் , சிறைக்காவலர் மற்றும் தீயணைப்பு துறை காலியாக உள்ள பணியிடங்கள் அறிவிக்கப்பட்டு அதற்கான விண்ணப்பங்கள் பெறப்பட்டது.

அவ்வகையில் இன்று காவலருக்கான தேர்வு பணிகள் துவங்கியது. காஞ்சிபுரம் மாவட்ட விளையாட்டு அரங்கில் இன்று முதல் நான்கு நாட்களுக்கு தேர்வு பணிகள் நடைபெறுகிறது.

இன்று காலை முதல் கட்டமாக 420 தேர்வர்கள் அழைக்கப்பட்டு அவர்களுக்கான கல்வி சான்றிதழ் சரிபார்ப்பு , எடை , உயரம் மற்றும் 1500 மீட்டர் ஓட்டப்பந்தயம் ஆகியவையில் தேர்வர்கள் பங்கு பெறுகின்றனர்.

நாளை இரண்டாம் நாள் 367 தேர்வர்கள் இதே போன்று பங்கு பெற உள்ளனர். இந்த இரு நாட்கள் நடைபெறும் தேர்வில் வெற்றி பெறுபவர்கள் அடுத்த கட்டமாக 9 மற்றும் 10 ம் தேதிகளில் நடைபெறும் கயிறு ஏறுதல், உயரம் மற்றும் நீளம் தாண்டுதல், 100 மீட்டர், 400 மீட்டர் ஆகிய பிரிவுகளில் தேர்வு நடைபெறும்.

இந்தத் தேர்வு பணிகளை காஞ்சிபுரம் சரக காவல் துறை துணைத்தலைவர் பகலவன் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுதாகர் ஆகியோர் அவ்வப்போது திடீர் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் தேர்வு பணியை ஒட்டி அப்பகுதி முழுதும் காவல்துறை பலத்த பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். தேர்வர்கள் கலந்து கொள்ளும் போட்டிகள் முழுவதும் வீடியோ மூலம் பதிவு செய்யப்பட்டு வருகிறது. இதில் ஏதேனும் குறைபாடுகள் என தேர்வர்கள் கருதினால் அங்குள்ள அதிகாரியிடம் முறையிட்டால் மீண்டும் டிஜிட்டல் முறையில் அவர்களது உயரம் , மார்பளவு உள்ளிட்டவை கணக்கிடப்படும் எனவும் கூறப்பட்டு வருகிறது.

தேர்வு பணிகளுக்கான அடிப்படை வசதிகள் அனைத்து ஏற்பாடுகளை மாவட்ட காவல்துறை சார்பில் செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.