Vanaviyal Mandram in Government Schools: தமிழகத்தில் 13,210 அரசு பள்ளிகளில் வானவியல் மன்றம்: முதல்வர் தொடங்கி வைப்பு

திருச்சி: Tn CM inaugurates Vanaviyal Mandram in Govt Schools at Adi Dravidar Girls High School, Trichy Kattur. திருச்சி காட்டூர் ஆதிதிராவிடர் பெண்கள் உயர்நிலைப்பள்ளியில் அரசு பள்ளிகளில் வானவியல் மன்றம் என்ற அமைப்பை முதல்வர் தொடங்கி வைக்கிறார்.

தமிழகத்தில் மாணவர்களின் அறிவியல் மனப்பான்மையை மேம்படுத்தும் வகையில் 13,210 அரசுப் பள்ளிகளில் வானவில் மன்றம் என்ற அமைப்பை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைக்கிறார்.

இதுகுறித்து பள்ளிக்கல்வித் துறை வெளியிட்டுள்ள செய்தியில், வானவில் மன்றம் தமிழக பள்ளிக் கல்வித் துறையின் கீழ் செயல்படும் அரசுப் பள்ளிகளில் 6 முதல் 8ம் வகுப்பு வரை பயின்று வரும் மாணவர்களின் அறிவியல் மனப்பான்மையை மேம்படுத்துவதற்காக முதல் முறையாக ஒரு புதுமையான முயற்சி மேற்கொள்ளப்படும்.

இதற்காக ஆர்வமும் செயல்திறனும் மிக்க கருத்தாளர்கள் இந்த திட்டத்தை பள்ளிகளில் செயல்முறையில் மாணவர்களுக்கு விளக்கிட வருவார்கள். தேவையான துறை கருவிகளையும் அவர்களே கொண்டு வருவார்கள்.

இதனையடுத்து அரசு பள்ளியில் பணியாற்றும் ஆசிரியர்களின் உதவியுடன் பல்வேறு சோதனைகளை செய்து காட்டி மாணவர்களின் கற்றல் திறனை மேம்படுத்த உதவுவர்.

இந்த வானவியல் மன்ற திட்டத்துக்காக 3,095 உயர்நிலைப்பள்ளிகள், 3,123 மேல்நிலை பள்ளிகள், 6,992 நடுநிலை பள்ளிகள் என மொத்தம் 13,210 பள்ளிகளுக்கு அரசு மொத்தம் ரூ.1.58 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் வானவியல் மன்றம் திட்டத்தை திருச்சி காட்டூர் ஆதிதிராவிடர் பெண்கள் உயர்நிலைப்பள்ளியில் இன்று காலை 10.30 மணிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார்.