Chief Minister Basavaraj Bommai : ராமநகரில் வெள்ளம் பாதித்த பகுதிகளை பார்வையிட்ட முதல்வர் பசவராஜ் பொம்மை

ராமநகர் : Chief Minister Basavaraj Bommai visited the flood affected areas in Ramanagara : ராமநகர் மாவட்டத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை முதல்வர் பசவராஜ் பொம்மை திங்கள்கிழமை பார்வையிட்டார்.

முதல்வர் பசவராஜ் பொம்மை திங்கள்கிழமை ராம்நகர் மாவட்டத்தில் மழை வெள்ளத்தால் ஏற்பட்டுள்ள‌ பாதிப்புகளை பார்வையிட்டார் (He visited the damage caused by rain and flood in Ramnagar district). மாருதி லேஅவுட்டில் உள்ள பக்ஷி ஏரி உடைந்ததால் ஏற்பட்டுள்ள பெரிய அளவிலான பயிர்கள் சேதம் குறித்து ஆய்வு செய்தார். அங்கிருந்து அரை கிலோ மீட்டர் தூரம் ரயில்வே தண்டவாளத்தில் நடந்து சென்று அப்பகுதியில் எற்பட்டுள்ள மழை வெள்ளச் சேதங்களை பார்வையிட்டார்.

உடைப்பு ஏற்பட்டுள்ள‌ பக்ஷி ஏரியின் அருகே இருந்து விவசாயிகள் வீடுகளுக்குச் சென்று அவர்களின் குறைகளை கேட்டறிந்த முதல்வர், அவர்களுக்கு உரிய இழப்பீடு வழங்குவதாக உறுதியளித்தார். மழையால் முற்றிலுமாக இடிந்து விழுந்த வீட்டிற்கு உடனடியாக ரூ. ஒரு லட்சமும் (A house which has completely collapsed due to rain will immediately get Rs. One lakh), மொத்தம் ரூ. 5 லட்சம் பகுதி வாரியாக வழங்கப்படும். பாதிக்கப்பட்ட மக்களின் குறைகளை பொறுமையாக கேட்டறிந்து நிவாரணம் வழங்குவதாக உறுதியளித்தார். பக்ஷி ஏரியை உடனடியாக சீரமைக்கும் பணிகளை மேற்கொள்ள அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டது. மேலும் சேதமடைந்த பட்டு சுருள் அலகுகள் மற்றும் இயந்திரங்களை பார்வையிட்டார். வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையான உதவிகளை உடனடியாக செய்ய முதல்வர் வலியுறுத்தினார். மழை வெள்ள பாதிப்பு ஏற்படமால் இருக்கத் தேவையான நடவடிக்கை எடுக்கவும் அதிகாரகளுக்கு உத்தரவிட்டார்.

இதில் வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.அசோக், உயர்கல்வி மற்றும் மாவட்ட பொறுப்பு அமைச்சர் டாக்டர்.சி.என்.அஸ்வத் நாராயணா (Revenue Minister R. Ashok, Higher Education and District In-charge Minister Dr. CN Aswath Narayana), முன்னாள் முதல்வரும், சென்னப்பட்னா எம்எல்ஏவுமான எச்.டி.குமாரசாமி, ராமநகர் எம்எல்ஏ அனிதா குமாரசாமி ஆகியோர் கலந்து கொண்டனர்.