Chennai Theevu Thidal Exhibition 2023 Start: சென்னை தீவுத்திடலில் சுற்றுலா பொருட்காட்சி தொடங்கியது

சென்னை: இந்திய சுற்றுலா, தொழில் பொருட்காட்சி ஒவ்வொரு வருடமும் (Chennai Theevu Thidal Exhibition 2023 Start) சென்னை தீவுத்திடலில் நடத்தப்பட்டு வருவது வழக்கம். அந்த வகையில் கடந்த 2020 மற்றும் 2021ம் ஆண்டுகளில் கொரோனா வைரஸ் தொற்று காரணமாக நடைபெறாமல் போனது.

இந்நிலையில், கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு பின்னர் இந்த ஆண்டு 47வது இந்திய சுற்றுலா, தொழில் பொருட்காட்சி நடைபெற உள்ளது. இதன் தொடக்க விழா நேற்று சென்னை தீவுத்திடலில் நடைபெற்றது. இந்த விழாவுக்கு சுற்றுலாத்துறை அமைச்சர் ராமச்சந்திரன் தலைமை வகித்தார். மேலும் அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன், சேகர்பாபு உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர். சென்னை மேயர் பிரியா, எம்.பி. தயாநிதி மாறன், சுற்றுலாத்துறை இயக்குனர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

தொடக்க விழாவாக கண்காட்சியின் நுழைவு வாயில் பகுதியில் திருவாரூர் தேர், மாமல்லபுரம் கடற்கரை கோவில், திருவள்ளூவர் சிலை உள்ளிட்டவைகள் தத்ரூபமாக வடிவமைக்கப்பட்டிருந்தது. இதனை சேகர்பாபு உள்ளிட்டோர் திறந்து வைத்தனர். அதே போன்று டிரைவ்இன் தியேட்டரும், ரெஸ்டாரன்ட் உள்ளிட்டவைகளும் திறந்து வைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.