Gold rate: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.320 குறைவு

தங்கம் விலை

Gold rate: உக்ரைன் – ரஷியா போர் மற்றும் கொரோனா ஊரடங்கு உள்ளிட்ட காரணங்களால் தங்கத்தின் மீதான முதலீடு அதிகரித்ததால் அதன் விலை தொடர்ந்து அதிகரித்து வந்தது.

எனினும் கடந்த சில நாட்களாக தங்கம் விலை ஏற்றம், இறக்கம் கண்டு வருகிறது. இந்நிலையில் தங்கம் விலை இன்று குறைந்துள்ளது. சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.320 குறைந்து ரூ.38,120-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

ஒரு கிராம் தங்கம் ரூ.4,765-க்கு விற்பனை செய்யப்படுகிறது. முகூர்த்த மாதமாக திகழும் வைகாசி மாதம் தங்கம் ஏறுமுகத்தில் இருந்த நிலையில் இன்று தங்கம் விலை சற்று குறைந்துள்ளது பொது மக்களுக்கு ஆறுதல் அளித்துள்ளது.

இதையும் படிங்க: Mango sales: சேலத்தில் களை கட்டிய மாம்பழம் விற்பனை