Chennai Metro Train Time Extension: சென்னை மெட்ரோ ரயில் நேரம், சேவைகள் நீட்டிப்பு

சென்னை: Chennai Metro Train Time Extension. சென்னை மெட்ரோ ரயில்களின் நேரத்தை நீட்டித்து அந்நிறுவனம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

இதுகுறித்து சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், அக்டோபர் 20, 21 மற்றும் 22 ஆம் தேதிகளில் மாலை நெரிசல்மிகு நேரங்களில் கூடுதல் மெட்ரோ இரயில்கள் மற்றும் மெட்ரோ இரயில் சேவைகள் நீட்டிக்கப்படுகின்றன.

தீபாவளியை முன்னிட்டு, நெரிசல்மிகு நேரங்களில் மாலை 05.00 மணி முதல் இரவு 08.00 மணி வரை 5 நிமிட இடைவெளியில் இயக்கப்பட்டு வரும் மெட்ரோ இரயில் சேவைகள், 2022 ஆம் ஆண்டு அக்டோபர் 20, 21 மற்றும் 22 ஆம் தேதிகளில் மட்டும் இரவு 10:00 மணி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

மேலும், நெரிசல்மிகு நேரங்களில் கூடுதல் மெட்ரோ இரயில்கள் இயக்கப்பட்டு மாலை 05.00 மணி முதல் இரவு 08.00 மணி வரை 5 நிமிட இடைவெளியில் இயக்கப்பட்டு வரும் மெட்ரோ இரயில் சேவைகள், மேற்குறிப்பிட்டுள்ள மூன்று நாட்கள் மட்டும், 5 நிமிடத்திற்கும் குறைவான இடைவெளியில் இயக்கப்படும்.

எனவே, 2022 அக்டோபர் 20, 21 மற்றும் 22 ஆகிய தேதிகளில் மாலை 5:00 மணி முதல் இரவு 8:00 மணி வரையிலான நெரிசல்மிகு நேரங்களில் பயணிகள் தங்கள் பயணத்தைத் திட்டமிடுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

இந்த கூடுதல் மெட்ரோ இரயில்கள் மற்றும் மெட்ரோ இரயில் நீட்டிப்பு சேவைகள் 20.10.2022 (வியாழன்), 21.10.2022 (வெள்ளிக்கிழமை) மற்றும் 22.10.2022 (சனிக்கிழமை) ஆகிய தேதிகளுக்கு மட்டுமே என செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.