சென்னை: தமிழ்நாட்டில் இரண்டு நாட்களுக்கு (Rain For 2 Days In Tamil Nadu) மிதமான மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.
இது குறித்து அந்த மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: கிழக்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக இன்று மற்றும் நாளையும் (ஜனவரி 8, 9 தேதி) தமிழக கடலோர மாவட்டங்கள் மற்றும் அதனை ஒட்டிய மாவட்டங்கள், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு இருக்கிறது.

மேலும் இதர மாவட்டங்களில் வறண்ட வானிலை நிலவும். வடதமிழக உள் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் அதிகாலை வேளையில் லேசான பனிமூட்டத்திற்கு வாய்ப்பு இருக்கிறது. மேலும் தமிழ்நாடு, புதுச்சேரி உள்ளிட்ட பகுதிகளில் ஜனவரி 9ம் தேதி முதல் 11ம் தேதி வரையில் வறண்ட வானிலை நிலவும். இவ்வாறு வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.