Car hit : 4 people killed: பர்கூர் அருகே கார் மோதியதில் நடைப் பயிற்சியில் ஈடுபட்ட 4 பேர் பலி

கிருஷ்ணகிரி : Car hit : 4 people killed :கிருஷ்ணகிரி மாவட்டம், பர்கூரை சேர்ந்தவர்கள் 40 வயது பாக்கியராஜ், 39 வயது சுஜித் குமார், 35 வயது கண்டவீரவேல், 38 வயது ஜெகதீசன். இவர்கள் அனைவரும் நண்பர்கள்.

ஜெகதீசன், அங்கிநாயனப்பள்ளியை அடுத்த மேல் கொட்டாய் என்னுமிடத்தில் டீ கடை நடத்தி வந்தார். நண்பர்களான இவர்கள் 4 பேரும், நாள்தோறும் அந்தப் பகுதியில் நடை பயிற்சியில் (Practice walking) ஈடுபடும் வழக்கம்.

வழக்கம்போல 4 நான்கு பேரும், சென்னை – கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலை, அங்கிநாயனப்பள்ளி பேருந்து நிறுத்தம் அருகே வெள்ளிக்கிழமை சென்று கொண்டிருந்தபோது, அந்த வழியாக வேகமாக வந்த கார், சாலை ஓரமாக நடந்து சென்ற(It hit 4 people who were walking on the side of the road) 4 பேர் மீதும் மோதியது. இதில் பலத்த காயமடைந்த பாக்கியராஜ், சுஜித்குமார், கண்ட வீரவேல் ஆகிய மூவரும் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தனர். பலத்த காயமடைந்த ஜெகதீசன் கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உயிரிழந்தார்.

கார் ஓட்டுநரான ஓசூர், மூக்கண்டபள்ளியைச் சேர்ந்த 40 வயது தணிகைமலை பர்கூர் காவல் நிலையத்தில் சரண் (Surrendered at Barkur police station)அடைந்தார். பெங்களூரு விமான நிலையத்திற்கு வரும் நபர்களை அழைத்து செல்ல வேலூரில் இருந்து காரை ஓட்டிச் சென்ற போது இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. கார் ஓட்டுநரை, கைது செய்துள்ளதாக போலீசார் தெரிவித்தனர். விபத்தில் நண்பர்கள் 4 பேர் உயிரிழந்துள்ளது அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

மாடியிலிருந்து குழந்தையை வீசிக் கொன்ற தாய்

பெங்களூரி மன நலம் பாதிக்கப்பட்ட தாய், தனது 4 வயது குழந்தையை 4-வது அடுக்குமாடி குடியிருப்பின் மாடியிலிருந்து வீசிக் கொன்றுள்ளார் (The mother killed the child ).

பெங்களூரு சம்பங்கிராம்நகரில் வியாழக்கிழமை குழந்தையை வீசிக் கொன்ற தாய், பின்னர் அவரும் தற்கொலைக்கு முயன்றுள்ளார். இது அங்கு இருந்த சிசி டிவியில் பதிவாகி உள்ளது.

தகவல் அறிந்த போலீசார் அங்கு சென்றப்போது, மாடியிலிருந்து குழந்தை விழுந்ததாக தெரிவித்துள்ளனர். அதனை தொடர்ந்து மேற்கொண்ட விசாரணையில் இந்த உண்மை தெரிய வந்தது. இதனையடுத்து அந்த குழந்தையின் தாயை போலீசார் கைது செய்தனர் (The police arrested the mother). இதனைத் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் அந்த பெண் மனநலம் பாதிக்கப்பட்டவர் என தெரியவந்தது. இதனையடுத்து அவரை மருத்துவமனையில் அனுமதித்து மனநலம் பாதிக்கப்பட்டவர்தானா என்பது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.