Throw Eggs At Siddaramaiahs Car : சித்தராமையா கார் மீது முட்டை வீசப்பட்டதற்கு பாஜக அதிருப்தி

பெங்களூரு : Throw Eggs At Siddaramaiahs Car :மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட குடகு மாவட்டத்திற்கு எதிர்க்கட்சித் தலைவர் சித்தராமையா சுற்றுபயணம் மேற்கொண்டுள்ளார். குடகு மாவட்டத்தில் அவருக்கு பாஜக கருப்பு கொடியை காண்பித்து கோ சித்து கான் என முழக்கமிட்டனர். இந்த நிலையில் அவரது கார் மீது இளைஞரணி பாஜகவினர் முட்டை வீசி, தங்கள் எதிர்ப்பை தெரிவித்துக் கொண்டனர். இதற்கு காங்கிரஸ் கட்சியினர் மட்டுமின்றி, பாஜகவினரும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பாக முட்டை வீசியவர்களை போலீசார் கைது செய்துள்ளனர் (The police have arrested those who threw the eggs). என்றாலும் பாஜவினரின் இந்த செயலுக்கு காங்கிரஸ் கட்சியினர் கண்டனம் தெரிவித்துள்ளனர். பாஜகவின் மூத்த தலைவர்களான முதல்வர் பசவராஜ் பொம்மை, முன்னாள் முதல்வர் எடியூரப்பா, அமைச்சர் ஆர். அசோக் உள்ளிட்டோரும், இந்த செயலை வன்மையாக கண்டித்துள்ளனர்.

இது தொடர்பாக சுட்டுரையில் தனது அதிருப்தியை பதிவிட்டுள்ள முதல்வர் பசவராஜ் பொம்மை, காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த முன்னாள் முதல்வர் சித்தராமையா, எதிர்க்கட்சித் தலைவராக தற்போது பதவி வகித்து வருகிறார். அவருக்கும், அவர் வகித்து வரும் பதவிக்கும் உரிய கௌரவம் உள்ளது. அவர் மீதான எதிர்ப்பை தெரிவிப்பதற்கு, வலுவான கருத்தை தெரிவிக்க வேண்டும். அதை விடுத்து, அவர் பயணம் செய்த காரின் மீது முட்டையை வீசுவது அநாகரிகமான செயல் (Indecent act). பாஜகவினரின் இந்த செயல் தனக்கு உடன்பாடில்லை. இதனை ஏற்றுக் கொள்ளவும் முடியாது என்று தெரிவித்த அவர், எதிர்க்கட்சித் தலைவர் மாவட்டத்திற்கு மழை வெள்ள பாதிப்புகளை ஆய்வு செய்ய வந்துள்ளார். அவருக்கு உரிய மரியாதையும், கௌரவத்தை வழங்க வேண்டும் என்று பதிவிட்டுள்ளார்.

மேலும் வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.அசோக் (Minister R. Ashok)தனது சுட்டுரையில், எதிர்க்கட்சித் தலைவர் சித்தராமையாவின் காரில் முட்டை வீசுவது ஜனநாயகத்திற்கான‌ நல்ல சம்பிரதாயம் இல்லை. எதிர்ப்பை அமைதியான முறையில் ஜனநாயக வழியில் காட்ட வேண்டும். அதைவிடுத்து இதைப் போன்று செய்வது நமது பாரம்பரிய மரியாதை இல்லை என்று பதிவிட்டுள்ளார்.

இதனிடையே எதிர்க்கட்சித் தலைவர் சித்தராமையாவின் கார் மீது முட்டை வீசியதை கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் பெங்களூரு சுதந்திரப்பூங்காவில் (Bangalore at Freedom Park) வெள்ளிக்கிழமை தர்னா போராட்டத்தில் ஈடுபட்ட‌னர். இந்த செயலை செய்தவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று போராட்டத்தில் கலந்து கொண்ட முன்னாள் அமைச்சர் எச்.எம்.ரேவண்ணா தெரிவித்தார்.

தமிழகத்தில் அண்மையில் அம்மாநில நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் (Finance Minister Palanivel Thiagarajan) மீது பாஜகவினர் காலணியை வீசி தங்கள் எதிர்ப்பை தெரிவித்தனர். இதனை கண்டித்து அறிக்கைவிட்ட அம்மாநில பாஜக தலைவர் கே.அண்ணாமலை, அமைச்சர் கார் மீது காலணி வீசியதை ஆதரிக்கவில்லை என்று தெரிவித்தார். ஆனால் எதிர்க்கட்சித் தலைவரின் கார் மீது முட்டை வீசியதற்கே கர்நாடகத்தில் ஆளும் கட்சியாக உள்ள பாஜகவினர் கடும் கண்டனம் தெரிவித்து, முதல்வர் முதல்வர் அமைச்சர் வரை அனைவரும் கண்டனம் தெரிவித்து, இது ஜனநாயக முறையிலான செயல் இல்லை என்பதனை தங்களது கட்சியினருக்கு தெரிவித்து, அரசியல் நாகரீகத்தை காண்பித்துள்ளது அனைவரையும் வியப்பில் ஆழ்த்தி உள்ளது.