அதிமுகவின் உட்கட்சி விவகாரத்தில் பாஜக தலையிடாது – அண்ணாமலை பேட்டி

annamalai bjp

BJP Annamalai: அ.தி.மு.க. வில் ஒற்றைத்தலைமை முறையை கொண்டுவர வேண்டும் என்று பெரும்பாலான மூத்த தலைவர்கள் கோரிக்கை விடுத்தனர். குறிப்பாக அ.தி.மு.க.வில் மீண்டும் பொதுச்செயலாளர் பதவியை ஏற்படுத்த வேண்டும். இந்த ஒற்றைத் தலைமை கோரிக்கை அ.தி.மு.க.வில் தற்போது பெரும் பூகம்பத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

அ.தி.முக.வில் ஒற்றைத் தலைமை முறையை கொண்டுவந்து விட வேண்டும் என்பதில் ஆதரவாளர்கள் தீவிரமாக உள்ளனர். எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்கள் அடுத்தடுத்து மேற்கொள்ளும் முயற்சிகளால் ஓ.பன்னீர்செல்வமும், அவரது ஆதரவாளர்களும் பல்வேறு கட்ட நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர்.

இதனால் அ.தி.மு.க.வில் ஓ.பன்னீர்செல்வத்துக்கும், எடப்பாடி பழனிசாமிக்கும் இடையே உள்ள கருத்து வேறுபாடுகள் வெட்ட வெளிச்சமாக்கி உள்ளது. இது அ.தி.மு.க.வில் சர்ச்சையை மேலும் அதிகரிக்க செய்துள்ளது.

இந்த நிலையில், அதிமுகவின் ஒற்றை தலைமை குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பாஜக தலைவர் அண்ணாமலை கூறியதாவது:-

“அதிமுகவின் உட்கட்சி விவகாரத்தில் பாஜக தலையிட்டதில்லை, என்றும் தலையிட போவதும் இல்லை. தமிழ்நாட்டில் வலுவான கட்சியாக அதிமுக உள்ளது. அதிமுகவில் உள்ள பிரச்சினைக்கு அவர்களே நல்ல முடிவை எடுப்பார்கள்” என்று கூறினார்.

இதையும் படிங்க: Agneepath scheme: வேலையில்லா இளைஞர்களுக்கு அக்னிப் பரீட்சை வேண்டாம்- ராகுல் காந்தி