BJP should help the public : பொதுமக்களுக்கு பாஜகவினர் உதவிட வேண்டும்: பாஜக மாநிலத் தலைவர் கே.அண்ணாமலை

சென்னை: BJP should help the public: BJP state president K. Annamalai : தமிழகத்தில் மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் பொதுமக்களுக்கு பாஜகவினர் உதவிட வேண்டும் என்று, அக்கட்சியின் மாநிலத் தலைவர் கே.அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட அறிக்கை: தமிழகத்தில் வடகிழக்கு பருவ மழை எதிர்பார்த்ததை விட அதிகரித்துள்ளதால் (Northeast Monsoon rains in Tamil Nadu are more than expected) ஏரிகள் நிரம்பி, உபரிநீர் பல்வேறு பகுதிகளில் திறந்து விடப்பட்டு மக்கள் வசிக்கும் பகுதிகளிலும் மழை வெள்ளம் சூழ்ந்துள்ளது. ம‌யிலாடுதுறை மாவட்டம் உள்பட டெல்டா மாவட்டங்களிலும், கடலோர மாவட்டங்களிலும் , ஒரு லட்சம் ஏக்கருக்கும் அதிகமான நெல், விவசாய பயிர்கள் சேதமடைந்துள்ளன.

சென்னை, பல்வேறு நகர்ப்புற பகுதிகள் வெள்ளக்காடாகக் காட்சியளிக்கின்றன (Chennai, various urban areas look like flood sea). முதல்வர் நேரில் சென்று பார்வையிட்டால் மட்டும் போதாது, அனைத்து அரசு எந்திரங்கங்க‌ளை உட‌ன டியாக முடுக்கி விட வேண்டும். விவசாயிகளுக்கு உடனடியாக ஏக்கருக்கு ரூ. 30,000 நிவாரணத் தொகை அறிவிக்க வேண்டும். தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மழையால் மக்கள் பெரிய பாதிப்பை சந்தித்து வருகின்றனர்.

எனவே, பாஜக நிர்வாகிகள் உடனடியாக களத்தில் இறங்கி, ‘மோடி கிச்சன்’ என்ற உணவு தயாரிக்கும் கூடங்களை அமைத்து (By setting up food preparation halls called ‘Modi Kitchen’) பாதிக்கப்பட்ட வழங்க வேண்டும் என தெரிவித்துள்ளார். மற்றொரு அறிக்கையில் தமிழகத்தில் கனிம வளத்தைக் கொள்ளை அடிப்பது, திமுக ஆட்சியில் எல்லை மீறி போய்க் கொண்டிருக்கிறது.இதற்கு சாட்சியாக கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டை வட்டம் கொரட்டகிரி கிராமத்தைச் சேர்ந்த மக்கள் தங்கள் குழந்தைகள் ஆடுமாடுகளுடன் கிராமத்தை விட்டே வெளியேறி ஒசூர் தேன்கனிக்கோட்டை சாலையில் கொட்டும் மழையில் தமிழகத்தின் கனிமவளங் களை கொள்ளையடிக்கும் லாரிகளை சிறை பிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ஆட்சியர் நடவடிக்கை எடுக்காததால் , கிராம மக்கள் தங்கள் வீடுகளைக் காலி செய்துவிட்டு, வனப்பகுதியில் தற்காலிகமாக கொட்டகை அமைத்து தங்கி உள்ளனர் . கொரட்டகிரி மக்கள் தங்கள் வாழ்விடங்களுக்கு மீண்டும் திரும்ப உடனடியாக மாநில அரசு நட வடிக்கை எடுக்க வேண்டும். இல்லையெனில் பாஜக சார்பில் போராட்டம் முன்னெடுக்கப்படும் (The protest will be carried out on behalf of the BJP)என்றும் அதில் தெரிவித்துள்ளார்.