BJP members resign : கர்நாடகத்தில் பிரவீண் நெட்டாரு கொலையை கண்டித்து பாஜகவினர் ராஜிநாமா

பிரவீன் நெட்டாருவின் கொலையைக் கண்டித்து மாநிலம் முழுவதும் நூற்றுக்கணக்கான பாஜகவினர் ராஜினாமா செய்துள்ளனர். பைந்தூரில் 300க்கும் மேற்பட்ட பாஜக தொண்டர்கள் ராஜினாமா செய்தனர்.

உடுப்பி: BJP members resign in Karnataka : பாஜக மாவட்ட இளைஞரணித் தலைவர் பிரவீன் நெட்டாருவைக் கொலை செய்ததைக் கண்டித்தும், கொலையாளிகளை உடனடியாகக் கைது செய்யும் வரை, அல்லது அவர்களை என்கவுன்டரை செய்வது வரை, கட்சியின் அமைப்புப் பணிகளில் பங்கேற்க மாட்டோம் என்று பைந்தூரில் 300 க்கும் அதிகமான‌ பாஜகவினர் புதன்கிழமை தங்களின் கட்சி பதவியை ராஜினாமா செய்தனர்.

பைந்தூர் பாஜக (Bhindur BJP) மண்டலத்தின் 8 மகாசக்தி மையத் தலைவர்கள், 54 சக்தி மையத் தலைவர்கள், பல்வேறு அணிகளின் தலைவர்கள், செயலாளர்கள் என மொத்தம் 300 க்கும் அதிகமானோர் தங்களது ராஜினாமா கடிதத்தை பைந்தூர் பாஜகவில் முக்கியப் பொறுப்புகளில் உள்ளவர்களிடம் அளித்தனர்.

தும்கூர் மாவட்ட பாஜக நிர்வாகி சகுந்தலா நடராஜ் (Shakuntala Nataraj)ராஜினாமா செய்து, கோபத்தை வெளிப்படுத்தியுள்ளார். வரும் நாட்களில் எனக்கு ஒன்று என்றால், என் குடும்பத்தாருக்கு வேறு யாராவது பணம் கொடுத்து ஓம் சாந்தி என்று கூறி கருணை காட்டுவார்கள், எனவே அந்த நிலைமைக்கு எனது குடும்பத்தை தள்ளக்கூடாது என்பதால்,நான் பதவியில் இருக்க விரும்பாவில்லை. எனது கட்சி பொறுப்பில் இருந்து விலகுகிறேன் என்று தெரிவித்துள்ளார்.

பாகல்கோட்டையில் பாஜக இளைஞரணி மாவட்ட தலைவர் (youth wing district president) ஆனந்த இங்கலகம்வி அலுவலக பணியாளர்கள் மற்றும் 12 மண்டல பணியாளர்கள் தங்களது கட்சி பதவியை ராஜினாமா செய்தனர். தேரடல் தொகுதி எம்எல்ஏ சித்து சவதியின் மகன் வித்யாதர் சவதியும் பாஜக மாவட்ட இளைஞரணி பொதுச் செயலாளர் பதவியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.

மைசூரு மாவட்ட‌ நரசிம்மராஜா சட்டப்பேரவை தொகுதி (Narasimharaja Legislative Assembly Constituency) பாஜக இளைஞரணி நிர்வாகிகள் தங்கள் பதவிகளை ஒட்டுமொத்தமாக ராஜினாமா செய்ய முன்வந்துள்ளனர். தலைவர் லோஹித், பொதுச் செயலர் நவீன் ஷெட்டி, தன்ராஜ், துணைத் தலைவர் சேத்தன், செயலர் ராஜு அருண் மற்றும் பிற கட்சியினர் தங்கள் பதவிகளை ஒட்டுமொத்தமாக ராஜினாமா செய்யத் தயார் எனத் தெரிவித்துள்ளனர்.

இதே போன்று மாநிலத்தில் பல்வேறு பகுதிகளில் பிரவீண் நெட்டாரு கொலையை கண்டித்து போராட்டம் நடைபெற்று வருகிறது. தாவணகெரே, கலபுர்கி, ஹூப்பள்ளி, மைசூரு, ஷிமொக்கா, சிக்கமகளூரு (Davanagere, Kalaburki, Hupally, Mysuru, Shimoka, Chikkamagaluru) உள்ளிட்ட மாநிலத்தின் பல மாவட்டங்களில் பிரவீன் நெட்டரின் கொலையைக் கண்டித்தும், பிரவீன் கொலைக்கு காரணமானவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க‌ பாஜகவினர் வலியுறுத்தி வருகின்றனர்.

பாஜக நகர தலைவர் ராஜினாமா எச்சரிக்கை

அரசிகெரே: தென் கன்னடாவில் கொல்லப்பட்ட மங்களூருவை சேர்ந்த பிரவீன் நெட்டாரு வழக்கில் குற்றவாளிகளை கைது செய்ய அரசு தவறிவிட்டதாக அரசிகெரே நகர பாஜக தலைவர்(Arsikere City BJP President) புருஷோத்தம் எச்சரித்துள்ளார்.

அண்மை காலங்களாக‌, சில ஜிஹாதிகள், பிஜேபி கட்சித் தலைவர்களைக் கொல்ல சதி செய்து வருகின்றனர், இதை தடுக்க வலியுறுத்தி பாஜக தலைவர்கள் மற்றும் தொண்டர்கள் அரசை வலியுறுத்தி வந்தனர். அதுபோன்றவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்குமாறு அரசை எச்சரித்தனர் (warned the government). ஆனால், அது போன்றவர்கள் மீது இதுவரை கடுமையான நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இதனால் கொலைச் சம்பவங்கள் அதிகரித்துள்ள நிலையில், பிரவீன் நெட்டாருவைக் கொலை செய்த‌ குற்றவாளிகளை அரசு உடனடியாக கைது செய்ய வேண்டும்.

இல்லை என்றால் மாநிலம் முழுவதும் (across the state) உள்ள பாஜகவினர் பெருமளவில் ராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளனர், இது கிராமத்தில் உள்ளவர்கள் மட்டுமின்றி நகரத்தில் உள்ளவர்களும் கட்சிப்பதவிகளை ராஜிநாமா செய்வார்கள் என எச்சரிக்கிறோம். மாநில அரசு இந்து விரோத அரசாக செயல்பட்டு வருகிறது. ஜிகாதிகளுக்கு பாடம் புகட்டும் வரை, கட்சியின் எந்த அமைப்பிலும் பங்கேற்க மாட்டோம் என்றார். பேட்டியின் போது பொதுச்செயலாளர் சந்துரு, துணை தலைவர் திவாகர், செயலாளர் சுபாஷ் ஆகியோர் உடனிருந்த‌னர்.