Ulsoor Thiruvalluvar statue park : அல்சூர் திருவள்ளுவர் சிலை உள்ள பூங்காவில் எடியூரப்பா, கருணாநிதியின் பெயர் இருந்த கல்வெட்டு மூடப்பட்டதால் பாஜக, காங்கிரஸ் போராட்டம்

பெங்களூரு: BJP, Congress protest after the inscription with the name of Yediyurappa and Karunanidhi in the park where the statue of Ulsoor Thiruvalluvar was closed : அல்சூர் திருவள்ளுவர் சிலை உள்ள பூங்காவில் எடியூரப்பா, கருணாநிதியின் பெயர் இருந்த கல்வெட்டு மூடப்பட்டதால் பாஜகவினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனைக் கண்டித்து வியாழக்கிழமை காங்கிரஸ் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கர்நாடக மாநிலம் பெங்களூரு நகரின் அல்சூர் ஏரிக்கரையில் (On the banks of Ulsoor lake in Bangalore city) 18 ஆண்டுகளாக மூடி வைக்கப்பட்டிருந்த திருவள்ளுவர் சிலையை கடந்த 2009 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 9ஆம் தேதி அப்போதைய தமிழக முதல்வர் கலைஞர் மு.கருணாநிதி மற்றும் கர்நாடகா வின் அப்போதைய முதல்வர் பி.எஸ்.எடியூரப்பா ஆகியோரின் முயற்சியால் திருவள்ளுவர் சிலை திறக்கப்பட்டது அந்த விழாவின் நினைவாக சிலையின் கீழ்ப்பகுதியில் கல்வெட்டு அமைக்கப்பட்டு இருந்தது

தற்போது சிவாஜி நகர் தொகுதி காங்கிரஸ் எம்எல்ஏ ரிஸ்வான் ஹர்ஷத் (Shivaji Nagar Constituency Congress MLA Rizwan Arshad), திருவள்ளுவர் சிலை உள்ள பூங்காவை தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் மேம்படுத்தி வருகிறார் இரண்டு நாட்களுக்கு முன் சிலையின் அருகே பீடம் அமைப்பதற்காக காங்கிரீட் போடப்பட்டது அப்போது எடியூரப்பா, கருணாநிதி அவர்கள் பெயர் கொண்ட கல்வெட்டு மூடப்பட்டது. இதையறிந்த சிவாஜி நகர் தொகுதி பாஜகவினர் திருவள்ளுவர் சிலை முன்பு திரண்டு தர்ணாவில் ஈடுபட்டனர் கல்வெட்டை மூடாமல் பூங்காவை மேம்படுத்த ஆட்சேபனை இல்லை என்றும் தெரிவித்தனர்.

இதனையடுத்து அப்பகுதியில் போலீசார் குவிக்கப்பட்டனர் பெங்களூர் மாநகராட்சி அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு வந்து ஜேசிபி வாகனத்தின் மூலம், கல்வெட்டு தெரியும்படி அகற்றும் பணியில் ஈடுபட்டனர். இதனைக் கண்டித்து காங்கிரஸ் கட்சியை சேர்ந்த முன்னாள் அமைச்சர்கள் ஜார்ஜ், தினேஷ்குண்டுராவ் மற்றும் ரிஸ்வான் ஹர்ஷத் (George, Dinesh gundu rao and Rizwan Arshad) ஆகியோர் தலைமையில் நூற்றுக்கும் மேற்பட்டோர் இன்று போராட்டத்தில் ஈடுபட்டனர்உடனடியாக அந்த இடத்தை சேதப்படுத்தியவர்கள்மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென்றும் கேட்டுக்கொண்டனர்.

பெங்களூர்த் தமிழ்ச் சங்கம் (Bangalore Tamil sangam)அறிக்கை:

இதனிடையே. சிவாஜிநகர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் திரு.ரிஸ்வான் அர்ஸத் அவர்கள் தனது தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து சிலை அமைந்திருக்கும் பூங்காவை ரூ.2 கோடி செலவில் புதுப்பிப்பதாகவும், சிலை மேடையை விரிவாக்கி இன்னும் அதிக எண்ணிக்கையில் அன்பர்கள் நின்று வள்ளுவருக்கு மாலை அணிவித்து மகிழ உரியதை செய்வதாகவும் கூறினார். இதனை நாம் மனம் உவந்து வரவேற்றோம். மேடை விரிவாக்கத்திற்கு சுவர் கட்டும்போது சிலை திறந்த கல்வெட்டு மறைக்கப் படுவதாக பல அன்பர்கள் தெரிவித்து அதற்கு எதிராக போராட்டம் நடத்தி உள்ளனர்.
பெங்களூர்த் தமிழ்ச் சங்கத்தின் கருத்து, எக்காரணம் கொண்டும் சிலை திறந்த கல்வெட்டு மறைக்கப்பட கூடாது. சுற்றிலும் சுவர் எழுப்பாமல் நான்கு புறமும் துண்களை அமைத்து சிலை மேடை விரிவாக்கப் படவேண்டும். இக்கருத்தை பரிசீலிக்கும்படி சட்டப்பேரவை உறுப்பினர் ரிஸ்வான் அவர்களை கேட்டுக் கொள்கிறோம்.

எனவே தமிழர்கள் உள்ளிட்ட அன்பர்கள் அனைவரும் இந்த பிரச்சனையை அரசியலாக்காமல் கலந்து பேசி சுமுகமான தீர்வு கண்டு சீரமைப்பு பணிகள் விரைவில் முடிக்க உதவும்படு கேட்டுக் கொள்கிறோம். வருகின்ற 2023 ஜனவரி 15 ஆம் நாள் நடைபெற இருக்கும் திருவள்ளுவர் நாளுக்குள், அனைத்து பணிகள் முடிக்கப் பெற்று சிறப்பாக கொண்டாட அனைவரும் ஒத்துழைக்க வேண்டும் என்று பெங்களூர்த் தமிழ்ச் சங்கம் கேட்டுக் கொண்டுள்ளது.