Birth anniversary of former CM Bhaktavatchalam : முன்னாள் முதல்வர் பக்தவத்சலம் 125-ஆவது பிறந்த நாள் விழா

சென்னை: 125th birth anniversary of former Chief Minister Bhaktavatchalam. தமிழக முன்னாள் முதல்வர் பக்தவத்சலம் 125-ஆவது பிறந்த நாள் விழா சென்னையில் நடைபெற்றது.

தமிழ்நாடு அரசின் சார்பில், முன்னாள் முதலமைச்சர் பெரியவர் எம் .பக்தவத்சலம் அவர்களின் பிறந்த நாள் விழா ஒவ்வொரு ஆண்டும் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதன்படி, அன்னாரின் 125-ஆவது பிறந்த நாளை முன்னிட்டு, தமிழ்நாடு அரசின் சார்பில், இன்று சென்னை . கிண்டி. காந்தி மண்டபத்தில் அமைந்துள்ள அன்னாரது மணிமண்டபத்தில் உள்ள திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து, திருவுருவப்படத்திற்கு அமைச்சர்கள் மலர்தூவி மரியாதை செலுத்தினர்.

பெரியவர் எம்.பக்தவத்சலம் அவர்கள் காஞ்சிபுரத்தில் 09.10.1897 அன்று நசரத்பேட்டையில் பிறந்தார். வழக்கறிஞர் பட்டம் பெற்ற இவர். நாட்டுப்பற்று காரணமாக சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்டார். காந்திய கொள்கையில் ஈடுபாடு உள்ளவர். இவர் சிறந்த தேசியவாதி, காந்தியடிகள் அறிவித்த அனைத்து போராட்டங்களிலும் கலந்து கொண்டு சிறை சென்றவர். 1935ஆம் ஆண்டு சென்னை மாநகராட்சி துணை மேயராக தேர்ந்தெடுக்கப்பட்டார். 1937ஆம் ஆண்டு அமைந்த இராஜாஜி அமைச்சரவையில் நாடாளுமன்ற செயலராக பொறுப்பு வகித்தார். 1946 முதல் 1962 வரை பல்வேறு துறைகளின் அமைச்சராக பொறுப்புவகித்து திறம்பட செயலாற்றிய இவர், 1963 முதல் 1967 வரை தமிழ்நாட்டின் முதலமைச்சராக பொறுப்பு வகித்தார்.

பெரியவர் எம்.பக்தவத்சலம் அவர்கள் எளிமையையும் காலந்தவறாமையையும், நேர்மையையும் வாழ்க்கை நெறியாக கடைபிடித்தார். 13.02.1987 அன்று மறைந்தார். அன்னாருக்கு பெருமை சேர்க்கும் விதமாக அன்னாரின் நினைவிடம் கிண்டி, காந்தி மண்டபத்தில் முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களால் 13.03.1998 அன்று திறந்து வைக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு அரசின் சார்பில்,பெரியவர் எம்.பக்தவத்சலம் அவர்களின் 125-வது பிறந்த நாளை முன்னிட்டு, அன்னாரது திருவுருவச்சிலைக்கு அருகில் அலங்கரித்து வைக்கப்பட்டுள்ள திருவுருவப்படத்திற்கு அமைச்சர் பெருமக்கள் மலர் தூவி மரியாதை செலுத்தினார்கள். நிகழ்ச்சியில் நாடாளுமன்ற சட்டமன்ற உறுப்பினர்கள். உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள், அரசு உயர் அலுவலர்கள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.