Bird flu outbreak confirmed : கேரளாவின் பல்வேறு பகுதிகளில் பறவைக் காய்ச்சல் பாதிப்பு உறுதி: 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பறவைகள் உயிரிழந்துள்ளன

Kerala : கேரளாவின் ஆலப்புழா மாவட்டம் ஹரிபாடில் பறவைக் காய்ச்சல் பரவியதை அடுத்து, அப்பகுதியில் சுமார் 20,000 பறவைகளை கொல்ல மாவட்ட நிர்வாகம் இன்று உத்தரவிட்டுள்ளது.

கேரளா: Bird flu outbreak confirmed : கேரள மாநிலம் ஆலப்புழா மாவட்டம் ஹரிபாடில் பறவைக் காய்ச்சல் பரவியதை அடுத்து, அப்பகுதியில் சுமார் 20 ஆயிரம் பறவைகளை கொல்லம் மாவட்ட நிர்வாகம் இன்று உத்தரவிட்டுள்ளது. ஹரிபாடு, வழுதானம், பாடிஞ்சரே மற்றும் வழுதானம் வடக்கே ஆகிய பகுதிகளில் இறந்த வாத்துகளுக்கு காய்ச்சல் இருப்பது கண்டறியப்பட்டது. இந்த வாத்துகளில் எச்5என்1 துணை வகை இன்புளுயன்சா ஏ வைரஸ் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது என்று மாவட்ட ஆட்சியர் ஆர் கிருஷ்ணதேஜா கூறினார்.

கடந்த வாரம் பறவைக் காய்ச்சலால் விவசாயிகள் 1500 வாத்துகளை இழந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன (According to reports, farmers have lost 1500 ducks due to bird flu). இறந்த வாத்துகளின் மாதிரிகள் போபாலில் உள்ள தேசிய உயர் பாதுகாப்பு விலங்கு நோய் மையத்திற்கு அனுப்பப்பட்டது. பரிசோதனை முடிவுகளில் பறவை காய்ச்சல் இருப்பது உறுதி செய்யப்பட்டது.

இது குறித்து கால்நடை பராமரிப்புத் துறை இணை இயக்குநர் பிந்து (Animal Husbandry Department Joint Director Bindu) பேசுகையில், சுமார் 20 ஆயிரம் வாத்துகளை கொல்ல உத்தரவிடப்பட்டுள்ளது. பறவைகளை கொல்லும் நடவடிக்கை இன்று காலை முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். இதனிடையே, பறவைக் காய்ச்சல் பாதித்த பகுதியில் இருந்து பறவைகள் நடமாட மாவட்ட ஆட்சியர் தடை விதித்துள்ளார்.

ஆலப்புழா, கோட்டயம், பட்டணம்திட்டா பகுதிகளில் கடந்த ஆண்டு டிசம்பரில் பறவைக் காய்ச்சல் கண்டறியப்பட்டது. முன்னதாக ஜூலை மாதம் கோழிக்கோடு பறவைக் காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டதில் 300க்கும் மேற்பட்ட பறவைகள் காய்ச்சலால் உயிரிழந்தன(More than 300 birds died of fever.).

மருத்துவ நிபுணர்களின் கூற்றுப்படி, H5N1 அல்லது H8N8 பொதுவாக பறவைக் காய்ச்சல் என்று அழைக்கப்படுகிறது. பறவை எச்சங்கள், உமிழ்நீர் மற்றும் சுரப்பு மூலம் தொற்று பரவுகிறது. ஆனால் H5N8 வைரஸ் மனிதர்களைத் தாக்கும் வாய்ப்பு குறைவு. 2016 ஆம் ஆண்டு அறிக்கை ஒன்றில், H5N8 இன் மனிதர்கள் பாதிக்கப்பட்டதாக யாரும் இதுவரை கண்டறியப்படவில்லை என்று உலக சுகாதார நிறுவனம் (World Health Organization) தெரிவித்துள்ளது.