Tobacco products: புகையிலை பொருட்களுக்கு மேலும் ஓராண்டு தடை- தமிழக அரசு

tobacco
குட்கா, பான் மசாலா உள்ளிட்ட புகையிலை பொருட்களுக்கு மேலும் ஓராண்டு தடை

Tobacco products: தமிழகத்தில் குட்கா, பான் மசாலா, புகையிலை உள்ளிட்ட பொருட்களை இளைஞர்கள் அதிக அளவில் பயன்படுத்தி வந்தனர். குட்கா பொருட்கள் குறைந்த விலையில் விற்பதும் இளைஞர்கள் அதை அதிகம் பயன்படுத்துவதற்கு ஒரு வாய்ப்பாக அமைந்தது.

இந்நிலையில் குட்கா, பான் மசாலா, புகையிலை உள்ளிட்ட போதை பொருட்களுக்கு இளைஞர்கள் அடிமையாவதை தடுக்கவும், அந்த பொருட்களால் உடலுக்கு புற்றுநோய் பாதிப்பு ஏற்படும் அபாயம் இருந்ததாலும், புகையிலை பொருட்களுக்கு கடந்த 2010-ஆம் ஆண்டு முதல் தமிழக அரசு தடை விதித்து வருகிறது.

இந்த தடை கடந்த மே 23-ஆம் தேதி நிறைவடைந்தது. இந்நிலையில் இந்த தடையை மேலும் ஒராண்டித்து தமிழக அரசு அரசிதழ் வெளியிட்டுள்ளது. குட்கா, பான் மசாலா, புகையிலை பொருட்களை தயாரிக்கவும், விநியோகிக்கவும், பாதுகாக்கவும் மேலும் ஓராண்டுக்கு தடை விதித்து தமிழக அரசு அரசிதழ் வெளியிட்டுள்ளது.

புகையிலை என்பது ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கும்

இதையும் படிங்க: Samsung M13: இணையத்தில் லீக் ஆன புது சாம்சங் 5ஜி ஸ்மார்ட்போன் விவரங்கள்