Appointment order: கோயம்புத்துரில் 96 இளைஞர்களுக்கு பணி நியமன ஆணை

கோயம்புத்துர்: Union Minister issued job appointment orders to 96 youths in Coimbatore. கோயம்புத்துரில் 96 இளைஞர்களுக்கு பணி நியமன ஆணைகளை மத்திய அமைச்சர் வழங்கினார்.

10 லட்சம் இளைஞர்களுக்கு மத்திய அரசுப் பணி வழங்கும் வேலைவாய்ப்பு விழாவின் ஒரு பகுதியாக கோவை இந்துஸ்தான் கலை அறிவியல் கல்லூரியில் 96 இளைஞர்களுக்குப் பணி நியமன ஆணைகள் இன்று (ஜனவரி 20, 2023) வழங்கப்பட்டன. மத்திய சமூகநீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை இணை அமைச்சர் நாராயணசாமி தலைமை தாங்கி இளைஞர்களுக்குப் பணி நியமன ஆணைகளை வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில் உரையாற்றிய மத்திய சமூகநீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை இணையமைச்சர் நாராயணசாமி, இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்குவதில் பிரதமர் நரேந்திர மோடி அதிக முக்கியத்துவம் செலுத்தி வருகிறார் இதற்காக வேலைவாய்ப்பு விழா நடத்தி மத்திய அரசின் பல்வேறு துறைகளில் வேலை வாய்ப்புகளை உருவாக்கி ஆணைகள் வழங்கப்படுகின்றன என்றார்.

இதற்குமுன் தொடங்கப்பட்ட மேக் இன் இந்தியா, ஸ்டார்ட் அப் இந்தியா, பி எல் ஐ, திறன் வளர்ச்சித் திட்டம் ஆகியவை இந்தியாவில் வேலை வாய்ப்பு உருவாக்குவதில் முக்கியப் பங்கு வகித்துள்ளன. அந்த வகையில் வேலைவாய்ப்பு முகாம் திட்டமும் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பை உருவாக்கி இந்தியாவின் வளர்ச்சியில் பங்கு கொள்ள வைத்துள்ளது என்று அவர் கூறினார்.

கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 22 ஆம் தேதி 75 ஆயிரம் பணி நியமன ஆணைகளை வழங்கி இந்நிகழ்ச்சியினை பிரதமர் தொடங்கி வைத்தார்.

இதைத் தொடர்ந்து நவம்பர் 22ஆம் தேதி நாட்டின் 45 பகுதிகளில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு வேலைவாய்ப்பு ஆணைகளை காணொலிக் காட்சி மூலம் பிரதமர் வழங்கினார். அத்துடன் இணைய வழியில் கர்மயோகி பயிற்சித் திட்டத்தையும் தொடங்கினார். இதன் மூலம் மத்திய அரசின் பல்வேறு துறைகளில் வேலை வாய்ப்பு பெரும் இளைஞர்களுக்கு பயிற்சி வழங்கப்படுகிறது.

ரயில்வே, உயர் கல்வி, மருத்துவம், தபால் துறை, வருவாய் துறை உள்ளிட்ட பல்வேறு மத்திய அரசுத் துறைகளில் பணியாற்றுவதற்கான பணி நியமன ஆணைகளைப் பெற்றுள்ளனர். இந்தியா 75 ஆவது சுதந்திர தினத்தை கொண்டாடும் வேளையில் இளைஞர்களுக்கு இந்த வாய்ப்பு கிடைத்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. அதிக அளவில் வேலை வாய்ப்பு உருவாக்குவது தேசத்தின் பொருளாதாரத்தையும் அதிகரிக்கும் என்று அவர் தெரிவித்தார்.