Applications Invites for the post of BMM: நாமக்கல் ஊரக வாழ்வாதார இயக்கத்தில் வட்டார மேலாளர்கள் பதவிக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

நாமக்கல்: Applications are welcome for the post of BMM:நாமக்கல் ஊரக வாழ்வாதார இயக்கத்தில் வட்டார மேலாளர்கள் பதவிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

நாமக்கல் மாவட்டம், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம். வட்டார இயக்க மேலாண்மை அலகில், ஒப்பந்த அடிப்படையில் இரண்டு வட்டார இயக்க மேலாளர்கள் (கொல்லிமலை, வெண்ணந்தூர் வட்டாரங்கள்) மற்றும் ஏழு வட்டார ஒருங்கிணைப்பாளர்கள் (கபிலர்மலை, எருமப்பட்டி, மல்லசமுத்திரம், மோகனூர், நாமகிரிபேட்டை, வெண்ணந்தூர் வட்டாரங்கள்) கீழ்க்கண்ட தகுதியின் அடிப்படையில் பெண்கள் மட்டும் தேர்வு செய்யப்படவுள்ளனர்.

வட்டார இயக்க மேலாளர் (BMM) தகுதிகள்:
ஏதேனும் ஒரு பட்டப்படிப்புடன் MS Office-ல் குறைந்தபட்சம் ஆறு மாத சான்றிதழ் படிப்பு முடித்திருக்க வேண்டும். விண்ணப்பிப்போர் 28-வயதுக்கு உட்பட்டவராக இருக்க வேண்டும். நாமக்கல் மாவட்டத்தில் வசிப்பவராக இருக்க வேண்டும். குறைந்தபட்சம் மூன்று ஆண்டுகள் இதேபோன்ற திட்டங்களில் பணியாற்றிய அனுபவம் பெற்றிருக்க வேண்டும். கணினி அறிவியியல் அல்லது கம்ப்யூட்டர் அப்ளிகேசன் பட்டபடிப்பு முடித்தவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.

வட்டார ஒருங்கிணைப்பாளர் (BC) தகுதிகள்:
ஏதேனும் ஒரு பட்டப்படிப்புடன் MS Office-ல் குறைந்தபட்சம் ஆறு மாத சான்றிதழ் படிப்பு முடித்திருக்க வேண்டும். விண்ணப்பிப்போர் 28-வயதுக்கு உட்பட்டவராக இருக்க வேண்டும். அந்தந்த வட்டாரத்தில் வசிப்பவராக இருக்க வேண்டும். குறைந்தபட்சம் இரண்டு ஆண்டுகள் இதேபோன்ற திட்டங்களில் பணியாற்றிய அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

மேற்கண்ட தகுதி உடைய விண்ணப்பதாரர்கள் எழுத்து தேர்வு மற்றும் நேர்முக தேர்வு மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர். தகுதியான பெண்கள் தங்களது விண்ணப்பத்தினை 17.11.2022 தேதிக்குள் மாவட்ட இயக்க மேலாண்மை அலகினில் சமர்ப்பிக்க மாவட்ட ஆட்சித் தலைவர் ஸ்ரேயா பி சிங் அழைப்பு விடுத்துள்ளார்.