application invites for membership in Women’s Welfare Board: தமிழ்நாடு மகளிர் நல வாரியத்தில் உறுப்பினர் பதவிக்கு விண்ணப்பிக்க அழைப்பு

சென்னை: application invites for membership in Women’s Welfare Board. தமிழ்நாடு கைம்பெண்கள் (ம) ஆதரவற்ற மகளிர் நல வாரியத்திற்கு அலுவல் சாரா உறுப்பினர் பதவிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

தமிழ்நாட்டில் உள்ள கைம்பெண்கள், கணவரால் கைவிடப்பட்ட பெண்கள், நலிவுற்ற பெண்கள், ஆதரவற்ற பெண்கள். முதிர்கன்னிகள் உள்ளிட்டோர் எதிர்கொள்ளும் பிரச்சினைகளை களைந்து அவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வசதிகளான கல்வி, சுகாதாரம், வேலை வாய்ப்பு, சிறப்பு சுய உதவிக் குழுக்கள் அமைப்பது தொழிற் பயிற்சிகள் வழங்குதல் போன்ற திட்டங்களை வகுத்து சமூகத்தில் அவர்கள் பாதுகாப்புடன் கண்ணியமான முறையில் வாழ்வதற்காக “கைம்பெண்கள் மற்றும் ஆதரவற்ற மகளிர் நல வாரியம்” அரசானை எண் 56 சமூக நலன் (ம) மகளிர் உரிமைத் துறை நாள் 02.09.2022-ன் படி உருவாக்கப்பட்டுள்ளது.

அரசாணையின் படி இவ்வாரியத்திற்கு 14 அலுவல்சாரா உறுப்பினர்கள் கீழ்கண்டவாறு நியமனம் செய்யப்பட வேண்டியுள்ளது.

கைம்பெண்கள் பிரதிநிதிகள் – 4 நபர்கள் (பட்டியலினத்தவர் – 1, பழங்குடியினர் -1, இதர வகுப்பினர் – 2) கல்வியாளர்கள் – 2 நபர்கள் பெண் தொழில் முனைவோர்கள் – 2 நபர்கள் பெண் விருதாளர்கள் – 2 நபர்கள் தன்னார்வ தொண்டு நிறுவன பெண் பிரதிநிதிகள் – 4 நபர்கள்

இவ்வாரியத்தின் அலுவல்சாரா உறுப்பினர்களைத் தேர்ந்தெடுப்பதற்கு மாநில அரசு தேர்வு செய்து நியமனம் செய்வதற்கு ஏதுவாக தகுதி மற்றும் அனுபவமுள்ள நபர்களிடமிருந்து தனித்தனி விண்ணப்பங்களை கல்வித்தகுதி, அனுபவங்களுக்கான சான்றிதழ்கள் மற்றும் புகைப்படங்களுடன் 31.10.2022 அன்று மாலை 05.30 மணிக்குள் கைம்பெண்கள் மற்றும் ஆதரவற்ற மகளிர் நல வாரியத்திற்கு கிடைக்கப்பெறுமாறு விண்ணப்பங்களை அனுப்புமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.

விண்ணப்பங்கள் கைம்பெண்கள் மற்றும் ஆதரவற்ற மகளிர் நல வாரியம், கலச மஹால் முதல் தளம், எழிலகம் பின்புறம், சேப்பாக்கம், சென்னை – 05 என்ற முகவரியில் நேரில் அளிக்கலாம்.

கைம்பெண்கள் (ம) ஆதரவற்ற மகளிர் நல வாரியத்திற்கு அலுவல் சாரா உறுப்பினர் பதவிக்கான விண்ணப்ப படிவம் மற்றும் தேவையான தகுதி குறித்த விவரங்கள் www.tn.gov.in/(Social Welfare and Women Empowerment Department) என்ற இணைய தளத்திலிருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.