இலங்கையில் தமிழ்நாடு மீனவர்களை சந்தித்த அண்ணாமலை

NEET exam
நீட் தேர்வை கண்டு மாணவர்கள் அச்சப்படக்கூடாது

BJP Annamalai: இலங்கை சென்றுள்ள தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை சிறையில் அடைக்கப்பட்டு உள்ள தமிழ்நாடு மீனவர்களை சந்தித்துள்ளார்.

இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் கட்சியின் அழைப்பின் பேரில் தமிழ்நாடு பா.ஜ.க தலைவர் அண்ணாமலை 4 நாள் பயணமாக இலங்கை சென்றுள்ளார். அங்கு பதுளை என்ற பகுதியில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் சார்பில் நடைபெற்ற மே தின கொண்டாட்ட நிகழ்ச்சியில் அவர் கலந்து கொண்டார்.

மேலும், அப்புத்தளை தங்கமலை தோட்டத்தில் இந்திய நிதி ஒதுக்கீட்டின்கீழ் கட்டுப்பட்டுள்ள வீடுகளை அவர் பார்வையிட்டார். பின்னர், இந்திய வம்சாவளி மக்களுடன் அவர் கலந்துரைய அவர் நுவரெலியாவில் உள்ள சீதை அம்மன் ஆலயத்திற்கும் சென்று வழிபாடு செய்தார்.

தொடர்ந்து, யாழ்ப்பாணம் சென்ற அவர், அங்குள்ள நல்லூர் கோயிலில் சாமி தரிசனம் செய்தார். பின்னர் நல்லை ஆதீனகுரு முதல்வர் ஸ்ரீலஸ்ரீ சோமசுந்தர ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகளை சந்தித்து கலந்துரையாடினார். அப்போது, யாழ்ப்பாணத்திற்கான இந்தியத் துணைத்தூதர் ராகேஷ் நடராஜ் ஜெயபாஸ்கரன், இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவர் செந்தில் தொண்டமான் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

இதையடுத்து, இலங்கை யாழ்ப்பாணம் சிறையில் உள்ள 12 தமிழக மீனவர்களை தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை சந்தித்தார். கடந்த மார்ச் மாதம் 24ம் தேதி 12 மீனவர்களை எல்லை தாண்டியாதாக இலங்கை கடற்படை கைது செய்தனர். கைதான மீனவர்களை பிணையில் விடுதலை செய்ய வேண்டும் என்றால் ஒரு மீனவருக்கு தலா 1கோடி ரூபாய் என 12 கோடி ரூபாய் அபராதம் செலுத்த வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டது. இவர்களை வரும் 5ம் தேதி வரை சிறையில் அடைக்க இலங்கை நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: Shawarma death in kerala: ஷவர்மா சாப்பிட்ட பிளஸ் 2 மாணவி உயிரிழப்பு