AIADMK former minister R. Kamaraj : அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர். காமராஜ் வீடு, அலுவலகம் உள்ளிட்ட இடங்களில் லஞ்ச ஒழிப்புத் துறை போலீஸார் சோதனை

அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி, ரூ.58.44 கோடி மதிப்பில் வருமானத்திற்கும் அதிகமாக சொத்து சேர்த்த புகார்

AIADMK former minister R. Kamaraj

தமிழ்நாடு : AIADMK former minister R. Kamaraj : அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர். காமராஜ் வீடு, அலுவலக் உள்ளிட்ட 49 இடங்களில் லஞ்ச ஒழிப்புத் துறை போலீஸார் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இதனை கண்டித்து அக்கட்சியின் தொடர்கள் வீட்டின் முன்பு முழக்கம் செய்து வருகின்றனர்.

காமராஜ் நன்னிலம் தொகுதியில் இருந்து அதிமுக சார்பில் தமிழ்நாடு சட்டப்பேரவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டு, காமராஜ் இந்து சமய மற்றும் அறநிலையத்துறை அமைச்சராகவும், உணவுத் துறை அமைச்சராகவும் பதவி வகித்தார்.

2017- ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் வருமான வரி தொடர்பான சோதனைகளை நடத்தும் அதிகாரிகளைத் தடுத்ததாகக் குற்றஞ்சாட்டப்பட்டு, காவல்துறை முதல் தகவல் அறிக்கையை பதிவு செய்த 3 அதிமுக அமைச்சர்களில் காமராஜும் ஒருவர்.

இவர் 2015- ஆம் ஆண்டு ஏப்ரல் முதல் 2021-ஆம் ஆண்டு மார்ச் 31 வரையிலான கால கட்டத்தில் அமைச்சராக பதவி வகித்தப்போது, அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி, ரூ.58.44 கோடி மதிப்பில் வருமானத்திற்கும் அதிகமாக சொத்து சேர்த்த புகாரில் லஞ்ச ஒழிப்புத் துறை போலீஸார் மன்னார்குடியில் உள்ள அவரது வீடு, அலுவலகம், சென்னை, திருவாரூர், தஞ்சை, திருச்சியில் உள்ள ஹோட்டல் உள்ளிட்ட 49 இடங்களில் சோதனையில் ஈடுபட்டனர்.

இது தொடர்பாக காமராஜ், அவரது மகன்கள் இனியன், இன்பன் உள்ளிட்ட 6 பேர் வழக்கு பதிவு செய்யப்பட்டிருந்தது.. சோதனையைக் கண்டித்து, மன்னார்குடியில் உள்ள அவரது வீட்டின் முன்பு அதிமுக தொண்டர்கள் குவிந்து முழக்கம் ஏற்படுத்தி வருகின்றனர்.

அண்மையில் அதிமுகவில் எடப்பாடி பழனிசாமி, ஓ. பன்னீர் செல்வம் என்று 2 அணிகளாக பிரிந்து செயல்பட்டு வரும் நிலையில் எடப்பாடியின் ஆதரவாளர்கள் வீடு மற்றும் அலுவலகங்களில் சோதனை நடைபெற்று வருவது. அக்கட்சியினரிடையே கலக்கத்தை ஏற்படுத்தி உள்ளது.

also read : Rally in puducherry : புதுவை மின்துறை தனியார் மையத்தைக் கண்டித்து விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் கண்டன பேரணி

also read : Boris Johnson resigns : இங்கிலாந்து பிரதமர் பதவியை ராஜிநாமா செய்தார் போரிஸ் ஜான்சன்

also read : Rishi Sunak : இங்கிலாந்தின் அடுத்த பிரதமராக இன்ஃபோசிஸ் தலைவர் நாராயண மூர்த்தியின் மருமகன் பதவியேற்க வாய்ப்பு

AIADMK former minister R. Kamaraj house and office anti corruption police raided