Gun in Madurai Jail: மதுரை சிறைச்சாலை வாசல் அருகே துப்பாக்கியால் பரபரப்பு

மதுரை: Gun in Madurai Jail: மதுரை சிறைச்சாலை வாசல் அருகே துப்பாக்கியால் பரபரப்புமதுரை மத்திய சிறைச்சாலை வாசல் அருகே குப்பைத் தொட்டியில் கிடந்த துப்பாக்கியால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

மதுரை மத்திய சிறை (Madurai Central Prison) தமிழ்நாட்டிலுள்ள மதுரையில் அமைக்கப்பட்டுள்ள சிறைச்சாலையாகும். இது 1865ம் ஆண்டு கட்டப்பட்டது. இங்கு 1252 கைதிகளை வைக்கும் வசதி உள்ளது. இந்த சிறைச்சாலை 31 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது.

Also Read: Bronze for Harjinder Kaur : காமன்வெல்த் விளையாட்டில் பளு தூக்கும் பிரிவில் இந்தியாவுக்கு 7 வது பதக்கம்: ஹர்ஜிந்தர் கவுருக்கு வெண்கலம்

இச்சிறை வளாகத்துள் இந்திராகாந்தி தேசிய திறந்தவெளி பல்கலைக்கழகத்தின் (Indira Gandhi National Open University) மையம் உள்ளது. இப்பல்கலைககழகம் நடத்தும் படிப்புகளில் கைதிகள் இலவசமாகச் சேர்த்துக் கொள்ளப்படுகின்றனர். அதற்கான செலவை அரசாங்கமே ஏற்றுக் கொள்கிறது. அவர்களுக்கான பலகலைக்கழக இறுதித் தேர்வுகளும் இவ்வளாகத்துள்ளாகவே நடத்தப்படுகின்றன.

Also Read: Heavy rain in Badkal : பட்கலில் கனமழைக்கு வீட்டின் மீது மலை மலை மண் சரிந்து விழுந்து நான்கு பேர் இறந்திருக்கலாம் என சந்தேகம்

மதுரை மத்திய சிறைச்சாலை (Madurai Central Prison) வாசல் அருகே அமைந்திருந்த குப்பை தொட்டியில், இன்று வழக்கம் போல் தூய்மை பணியாளர்கள் குப்பைகளை அகற்றும் பணியில் ஈடுபட்டு வந்திருந்தனர். அப்போது அந்த குப்பை தொட்டியில் சிறிய அளவிலான கையடக்க ஏர்கன் இருந்துள்ளது.

இதனால் அதிர்ச்சி அடைந்த தூய்மை பணியாளர்கள், துப்பாக்கி குப்பை தொட்டிகள் கிடப்பதே குறித்து கரிமேடு காவல் நிலையத்திற்கு சிறை நிர்வாகத்திற்கும் தகவல் தெரிவித்தனர். தகவலின் அடிப்படையில், போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Also Read: Suraraipottru deleted scene Viral: சூரரைப்போற்று நீக்கப்பட்ட சண்டைக் காட்சி இணையத்தில் வைரல்

இதனைத்தொடர்ந்து, கையடக்க ஏர்கன் பயன்படுத்த முடியாத அளவிற்கு பழுதடைந்து இருப்பதால் ,யாரேனும் குப்பைத் தொட்டியில் வீசி சென்று இருக்கலாம் என போலீசார் தரப்பில் தெரிவிக்கின்றனர்.

ஏற்கெனவே கடந்த மே 8ம் தேதி மாலை, சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் பகுதியைச் சேர்ந்தவர் தினேஷ் (எ) மண்ட தினேஷ். அதே பகுதியை சேர்ந்த நிதிஷ்குமார், பிரகாஷ்ராஜ் ஆகியோர் கொடைக்கானல் பகுதியைச் சேர்ந்த சையது இப்ராஹிம் என்பவரிடம் கஞ்சா கேட்டதாக கூறப்படுகிறது. இதில், இருதரப்பினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து ஆத்திரம் அடைந்த கைதிகள் சிறையினுள் மோதிக் கொண்டனர்.

மோதலில் சையது இப்ராஹிம், மண்ட தினேஷ் ஆகியோருக்கு காயமடைந்தது குறிப்பிடத்தக்கது.